புதன், 16 செப்டம்பர், 2020

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. வங்கதேச கரன்சிக்கு எதிராகக் கூட வீழ்ச்சி.

Anwar Ali : BJP ஜால்ராக்கள் சண்டைக்கு வர வேண்டாம். This is forwarded msg

* அமெரிக்காவுக்குப் போகிறீர்கள். செலவுக்கு இந்திய ரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10,000 ரூபாய்க்கு 133 டாலர்களைத் தான் தருவார்கள்.*
அதே 2014 ஆம் ஆண்டு. தாய்லாந்து போகிறீர்கள். 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். 5,400 'தாய் பாட்' கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4,200 'தாய் பாட்' தான் கிடைக்கும்.
அமெரிக்கா தாய்லாந்தை விடுவோம். வங்கதேசத்தைப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தால், 10,000 ரூபாய்க்கு 1,31,00 பங்களாதேஷ் 'டக்கா' கிடைத்திருக்கும். இப்போது போனால் 1,13,00 டக்கா தான் கிடைக்கும்.
காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருக்கிறது. சரி; வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட வேண்டாம். உள்நாட்டு நிலவரம் என்ன?
காமன்மேனாக - எளிமையாக யோசித்துப் பார்ப்போம். எனக்கும் அவ்ளோ தான் தெரியும்.
2014 ஆம் ஆண்டு (பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு) சமையல் கேஸ் விலை, பெட்ரோல் - டீசல் விலை, பேருந்துக் கட்டணம், இரயில் கட்டணம், சினிமா டிக்கெட் விலை, ஹோட்டல்களில் உணவுகளின் விலை, பால் விலை, மின்சாரக் கட்டணம் & இன்ன பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை என்னவாக இருந்தது. அவற்றுடன் ஒப்பிடும் போது, கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்துள்ளது? ஒரு காமன்மேனின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்துமே விலை உயர்ந்துள்ளன தானே? (இதுல மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒரு சிலது மட்டுமே உண்டு).
2014 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 113 டாலர். அதன் பிறகு மிகக் குறுகிய காலத்தில் அது குறைந்து 36 டாலர் வரைக்கும் வந்ததாக ஞாபகம். இப்போது 45 டாலர். சில மாதங்களுக்கு முன்பு 10 டாலர், 0 என மைனஸில் கூட வர்த்தகம் ஆனது.
ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மட்டும் கூடிக் கொண்டே போகிறது. இது என்ன லாஜிக்? எங்கே போகிறது அந்தப் பணம்? காமன்மேன்களுக்கு ஏன் ஒரு நன்மை கூட கிடைக்கவில்லை?
கொரோனா லாக் டவுன் காலத்திலும், அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் மட்டுமே இயங்கும் போதும் டோல் கேட்டில் சுங்க வரியை உயர்த்தினார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய அராஜகம் ?
இதுபற்றியெல்லாம் யாரையும் சிந்திக்க விடாமல், கேள்வி கேட்க விடாமல் தேசபக்தி, மாட்டுக்கறி, எல்லையில் ராணுவ வீரர்கள், காஷ்மீருக்குள் தீவிரவாதி, முஸ்லீம்கள் நாய்க்கறி சாப்பிட்டு பாகிஸ்தான் போகணும், இது இந்துக்களின் பூமி, கந்தர் சஷ்டி, ராமர் கோயில், விநாயகர் சதுர்த்தி, இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க. அதுக்கு முரட்டு முட்டுக்கொடுக்க முட்டாள் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவங்களை நினைச்சா தான் இன்னும் கொடூரமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. அவங்க கட்சியால் ஒரே ஒரு நல்லது கூட நடக்காமல், காமன்மேன்களில் ஒருவராக அவர்களுக்குமே பாதிப்பு தான் அதிகம். ஆனால், எனக்கு வலிக்கலயேன்னு முட்டு கொடுத்துட்டு இருக்காங்க. வெறுப்பை பரப்பிட்டும் இருக்கானுங்க.
அப்பவும் அவனுங்க முட்டுத்தறாய்ங்க. இதான் ஹைலைட்டே !
அமெரிக்காவோ, தாய்லாந்தோ, வங்கதேசமோ... அப்போ பத்தாயிரம் எடுத்துட்டு போனதுடன் ஒப்பீடு செய்தால் இப்போ வீழ்ச்சி. இது ஒருபுறம் இருக்கட்டும். 10,000 எடுத்துட்டு போறதுல எவ்ளோ சிக்கல் இருக்கு பாருங்க... இவ்வளவு விலைவாசி ஏற்றங்களையும் தாக்குப் பிடித்து, வருவாய் ஈட்டி, அதற்கு தனியா ஜி.எஸ்.டி கட்டி, கஷ்டப்பட்டு 10,000 எடுத்துட்டுப் போனா, அதோட மதிப்பும் வீழ்ந்திருக்கும்! வெந்தப் புண்ணில் வேல் !
பாஜக ஆளும் வரை ஒவ்வொரு ஆண்டும் இது பொருந்தும்.
2014 இல் பாஜக ஆட்சி அமைக்கும் போதும் சரி, 2016 இல் டீமானிடைசேஷன் சமயத்திலும் சரி... மோடியின் பக்தர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள் என்று நினைவு கூர்ந்து பாருங்கள். டாலர் மதிப்பு 40 வரும்... பெட்ரோல் டீசல் விலை 50 க்கு கீழ் வரும்... தீவிரவாதிகள் செயல்பாடுகள் கட்டுக்குள் வரும்... ப்லா ப்லா ப்லா... ஆனால் என்ன தான் நடந்தது?
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. வங்கதேச கரன்சிக்கு எதிராகக் கூட வீழ்ச்சி. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட போதும், பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு வரலாறு காணாத விலையேற்றம், பதான்கோட், புல்வாமா எனத் தீவிரவாத தாக்குதல்கள். (350 கிலோ வெடி பொருட்களுடன் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதே இன்றளவும் மர்மமாக இருக்கிறது), சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறல்... 20 இந்திய வீரர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணித்தார்கள். என்ன தான் செய்கிறது இந்தியாவை ஆளும் பாஜக அரசு? யோசிக்கவே மாட்டார்களா? சீனா செய்த காரியத்தை பாகிஸ்தான் செய்திருந்தால் எவ்வளவு பொங்கியிருப்பார்கள்? இங்கே நாம் அண்டை வீட்டில் வாழும் இஸ்லாமியர்களைக் கூட விரோதிகளாக கட்டமைத்திருப்பார்களே. ஆனால் சீனா விஷயத்தில் பெட்டிப்பாம்புகளாய் அடங்கியது ஏன்?
சிந்திப்போம். அறியாமையால் இருப்போருக்கு புரிய வைப்போம். மதமோ, கடவுளோ நம்மைக் காப்பாற்றாது. நம்மை ஆளும் அரசு தான் நம் அனைவரையும் சமமாகப் பாவித்து, நமக்கான நல்லாட்சியைத் ் !
SELVAKUMAR from Whatsappp

கருத்துகள் இல்லை: