செவ்வாய், 15 செப்டம்பர், 2020

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

maalaimalar :மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.  தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில் இளங்கலை படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேர்க்கை சட்டமுன்வடிவு தாக்கல் செய்யபட்டது.
மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும், ‘நீட்’ தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.<>அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு கடந்த மார்ச் 21-ம் தேதி அமைக்கப்பட்டது.
 அந்தக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையில் இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: