வெள்ளி, 18 செப்டம்பர், 2020

சைனீஸ் இந்தியர்களை உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் பல தலைமுறைகளாக .. The Deoliwallahs

 Susairaj Babu : · இனிய காலை வணக்கம் நண்பர்களே,,,, ஆங்கிலோ இந்தியர்களை நமக்குத் தெரியும், ( முதன் முதலில் ஆங்கிலோ-இந்திய இனம் உருவானது கோலார் தங்க வயலில் KGF-ல் ஆங்கிலேயருக்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்ட கலப்பினால் உருவானது, பிறகு இந்தியா முழுவதும் அங்கிருக்கும் மக்கள் ஆங்கிலேய கலப்பால் பிறகு ஒட்டுமொத்த ஆங்கிலோ-இந்திய இனம் என்று ஒரு உருவானது)
""சைனீஸ் இந்தியர்களை உங்களுக்கு தெரியுமா? ""
திபெத் வழியாகவும் அருணாச்சலப் பிரதேச வழியாகும், பல ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான சீனர்கள் வட இந்தியாவில், குடியேறினார்கள். குறிப்பாக ராஜஸ்தான் மேற்கு வங்காளம் நேபாளத்தை ஒட்டிய பகுதிகளில் வரத் தொடங்கினர், இவர்கள் இங்கு உள்ளவர்களே திருமணம் செய்து கொண்டு பல தலைமுறைகளாக வாழத் தொடங்கினர். இவர்களுக்கு சீன மொழி தெரியாது, இந்தி வங்காளம் நேபாளி மொழிகளையே பேசினர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மான எல்லை பிரச்சனையில் போர் மூண்ட பிறகு,
1962 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி திடீரென்று இந்திய வீரர்களின் ஒரு குழு
மாலை 4:30 மணி சீனர்களின் வீட்டுக்கதவைத் தட்டியது. குடும்பத்தினரை தங்களுடன் நடக்கச் சொன்னது. பல இடங்களில் கைது செய்யப்பட்ட சீனர்களை ராஜஸ்தான் மாநிலம் "தியோலி கேம்ப்" என்ற இடத்திற்கு கொண்டு வரப்பட்டனர், தியோலி என்ற இடமானது இரண்டாம் உலகப்போரின் போது எதிரி நாட்டு வீரர்கள் அடைக்க பயன்படுத்தப்பட்ட ஒரு தடுப்பு முகாம், பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் அனைவரையும், சிறைப்படுத்தப்பட்ட இடம் நேரு உட்பட..
சீனர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது அன்றைய காலகட்டத்தில் அது ஒரு போர் அரசியல்.
'தி தியோலி வால்லாஸ்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் திலீப் டிசோஸா, இந்த வரலாற்றைப் பற்றி கூறுகிறார்.
"1962-ல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு சண்டை நடந்தது. இந்தியாவில் வாழும் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் இந்திய மொழியை மட்டுமே பேசினர். "
"அப்போதைய இந்திய குடியரசு தலைவர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் 'இந்திய பாதுகாப்புச் சட்டத்தில்' கையெழுத்திட்டார், இதன் கீழ் எந்தவொரு நபரும் எதிரி நாட்டில் இருந்து வந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம்."
அதன்பேரில் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சீனர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் தியோலி என்ற தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
சில நாட்களில், சீன மக்களைச் சேர்ந்தவர்களை இந்தியா கைது செய்து தியோலியில் வைத்திருப்பது சீனாவுக்குத் தெரிய வந்தது. அந்த மக்களை அழைக்க விரும்புவதாக சீனா முன்மொழிந்தது.
பல கைதிகள் இந்த முன்மொழிவை ஏற்று சீனா சென்றனர். சீனாவில் வறட்சி இருப்பதாக வதந்தி இருந்ததால் பலர் சீனா செல்ல விரும்பவில்லை.
கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை எதிர்ப்பதன் மூலம் தைவான் அரசாங்கத்திற்கு முன்னர் ஆதரவளித்ததால் பலர் சீனா செல்ல விரும்பவில்லை.
இவர்களில் பல தலைமுறையினர் இந்தியாவில் வாழ்ந்தார்கள், அவர்கள் இந்தி, பங்களா அல்லது நேபாளி மொழிகளில் மட்டுமே பேசினர். அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவுக்கு எந்த ஆப்பிரிக்க நாட்டையும் போலவே சீனாவும் அவர்களுக்கு ஒரு வெளிநாடாக இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசத்துக்கு பிறகு,
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்த மக்கள் தங்கள் பழைய வீட்டை அடைந்தபோது, ​​அந்த வீடுகள் மற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. கனடா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் குடியேற பலர் முடிவு செய்தனர்.
இந்த குடும்பங்களில் பலர் இன்னும் கனடாவின் டொராண்டோ நகரில் வாழ்கின்றனர்.
'அசோசியேஷன் ஆஃப் இந்தியா தியோலி கேம்ப் இன்டர்நேஷன்ஸ் 1962' என்ற பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கனடாவில் உள்ள இந்திய உயர் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தவறான தடுப்பு காவல் சிறை நடத்தைக்கு மன்னிப்பு கேட்குமாறு இந்திய அரசிடம் கோரினார்.
'தி தியோலி வால்லாஸ்' புத்தகத்தின் ஆசிரியர் திலீப் டிசோசா கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தை உயர் தூதரக அதிகாரிகளுக்கு வழங்க முயன்றபோது, ​​அவர்கள் அதை ஏற்கவில்லை.
அந்த கடிதங்களை உயர் தூதரக வாயிலில் ஒட்டிவிட்டு அந்த மக்கள் திரும்பினர். அந்த மக்கள் அனைவரும் தியோலி முகாமின் படங்கள் அச்சிடப்பட்ட சட்டைகளை அணிந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: