புதன், 16 செப்டம்பர், 2020

நம்ம குழந்தை நாலு ... தான் சூர்யா மாதிரி ஆட்களுக்கு நாம இத்தனை நாள் கூவி கூவி பேசினது புரியும்

Karthick Ramasamy : இணையத்தில் பல்லாயிரக்கணக்கான திமுக ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
இதில் நடிகர் சூர்யாவின் அறிக்கையை சந்தேகக்கண்ணோடு பார்க்க வேண்டும் என்கிற கருத்தை அதிகபட்சம் நான்கைந்து பேர் மட்டுமே சொல்லியிருப்பார்கள். அது கூட அவர்கள் கருத்து மட்டுமே.
இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்.
உடனே இந்த உபிக்களே இப்படித்தான் அப்படித்தான் என்று அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்து விட்டார்கள் நடுநிலை நண்பர்கள்.
2017ல் நீட் எதிர்ப்பு பற்றி மற்ற யாரும் பேசாத போது ஆயிரக்கணக்கான தொடர் பதிவுகள், நீட் எதிர்ப்பு தொடர்பான புத்தகம் என்று இயங்கியவர்கள் திமுக ஆதரவாளர்கள்.
சில கருத்துக்களில் மாறுபாடு வரலாம், அதற்காக அந்த கருத்தை தாராளமாக மறுக்கலாம்.
பலரின் வார்த்தைகளில் இருக்கும் வன்மத்தை பார்க்கும்போது எப்பொழுது திட்ட வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக்கிடந்தவர்கள்போல உள்ளது.

 கேப்டன் குமார் : அதுக்கு ஏன் நம்மாளுங்க இடம் கொடுக்கர மாதிரி நடக்கனும் இந்த ரவிசங்கர் தொடர்ந்து திமுகாவ தேர தெருவுல இழுத்துவிட தான் பேசுற மாதிரி தெரியுது. 

Karthick Ramasamy: அவர் பேசுனா அது அவர் கருத்து, அதற்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம்? 

கேப்டன் குமார் : திமுக அரக்கர் கூட்டத்தில் ஒருத்தர் தானே அவர் அப்படி தான் பேசிக்குறாங்க. 

சங்கரலிங்கம் பொசெ : எங்கோ ஒரு கட்சிக்காரன் யார்டையோ சண்டை போட்டுட்டான் அதுனால திமுக ரவுடி கட்சின்னு சொன்னா நீங்க சரி சொல்லுவீங்களா? 

Devi Somasundaram : ரவி சங்கர் திமுக உறுப்பினரா ? ....அவர் கருத்து திமுக கருத்தா ? ...அவர் பேசும் கருத்தில் முரண் இருந்தா சுட்டி காட்டலாம்..அவர் பேசவே கூடாதுன்னா அது நம்ம தப்ப வெளிப்படுத்ற்றாரோன்ற கோவம் தான . கேப்டன் குமார் : இல்லை அவரே திராவிடம் 2.0 அது இதுனு சுத்திட்டு இருந்தார் எனக்கு தெரியும் அது அவர் தனிப்பட்ட கருத்துனு ஆனா மத்த கட்சிகாரவங்களுக்கு அப்படியே எடுத்துப்பாங்களா ஏன்னா திமுகவ திட்ட எப்ப சான்ஸ் கிடைக்கும் நேத்து ஆரம்பிச்ச லெட்டர்பேடு கட்சிவரை வெயிட் பன்றாங்க பத்தா குறைக்கு நடுவுல மட்டும் நிக்கும் அரியவகை உயிரினங்கள் வேற திமுகவுக்கு எதிரி எண்ணிக்கை ரொம்ப ஜாஸ்தி அதுக்கு ஏத்த மாதிரி தான் நடந்துக்கனும் கட்சிகாரன்னு சொல்ற பயலுகளே சக கட்சிகாரன போட்டு குடுத்து விளையாடுறான் ஈன்னத்த சொல்ல என்னைய மாதிரி சாமான்ய கட்சி காரனுகளுக்கு தான் மனவேதனையா இருக்கு இப்படியே அடிச்சிட்டு அடுத்த தடவையும் தப்பா எதும் நடந்துருமோனு கெதக்னு இருக்கு இன்னொரு முறை திமுக தோற்க்கும் நிலை வந்தால் தமிழ்நாட்ட செங்கல் செங்களா பிரிச்சிடுவானுக அத புரிஞ்சி நடந்துகிட்டா சந்தோஷம் . 

கேப்டன் குமார் : எனக்கு புரியது ஆனா திமுகல இருக்கரவராதான் பொது இணைய வாசிகளுக்கு அவர் அறிய பட்ருக்கார் . 

கேப்டன் குமார் : டீபால்டா அவர் திமுகாரர் தான் மத்தவங்க நெனைச்சுப்பாங்க ரொம்ப சிம்பிளான உதாரணம் சொல்றேன் எந்த ஊழல் குற்றமும் நிரூபிக்க படாத கலைஞரைத்தான் ஊழல் வாதினு ஒரு பிம்பத்த பொது புத்தில பதிய வைச்ச மாதிரி தான் இதுவும் அத எவ்வளவு பன்னாலும் மாத்துறது கஷ்ட்டம்.. 

சங்கரலிங்கம் பொசெ:  குத்தம் சொல்றவன் சொல்லிட்டு தான் இருப்பான் அதுக்கெல்லாம் பயந்தா அரசியல் செய்ய முடியாது. கேப்டன் குமார் : அது என்னமோ உண்மைதான் ஆனா நடுநிலை மங்கூஸ் மண்டையர்கள் தொல்லை தான் தாங்க முடியல . 

Devi Somasundaram " : சூர்யா நீட் எதிரா தன் கருத்த பதிய வைச்சத வரவேற்கிறேன்..ஆனா சூர்யா பேசினதாலயே நீட் தவருன்னு அர்த்தம் என்பது போன்ற ஓவர் ஹைப்ப விமர்சிக்கின்றேன் 

.நம்ம குழந்தை நாலு செத்தா தான் சூர்யா மாதிரி ஆட்களுக்கு நாம இத்தனை நாள் கூவி கூவி பேசினது புரியும் என்பது சூர்யாவோட சிந்தனை குறைபாட்ட காட்டுது.. நாதகவ பத்து வருடமா திமுக காரன் சல்லி சல்லியா உடைச்சான் ..இன்னிக்கு நாதகன்றதுவெறும் வாட்சப் குழு தான்..அன்னிக்கு நாதகவ தன்னதனியா அடிச்ச திமுகவ கேலி செய்த சவுக்கு இன்னிக்கு கல்யாண சுந்தரம் பத்தி பத்து போஸ்ட் போட்டுட்டு நாதக வ நான் தான் அழிச்சேன்னு நாலு பேர வச்சு மீம் போட்டுகறார் ...அதற்கும் சிலர் சில்லறைய சிதற விடறாங்க..,இதே சவுக்கு தான் அன்னிக்கு நாதகவ விமர்சிச்ச திமுக வ கேலி செய்தார் ...ஆக திமுக காரன் உடைக்கிற வரை கைய கட்டிட்டு இருந்துட்டு அப்றம் பொணத்துல மேல ஒரு கல்ல தூக்கி போட்டு நான் தான் கொன்னேன்னு சொல்லிப்பது அறமா இல்லயானு உங்க முடிவுக்கே விடறேன். 

Devi Somasundaram : நாளைக்கு சசிகலா வந்து நீட்ட எதிர்க்கிறேன்னு சொல்லிட்டு அதிமுகவ தேர்தல் களத்தில் நிறுத்தினா சூர்யா வோட நிலைப்பாடு என்ன ? ... இல்லை திமுக தான் சரியா செய்யும்னு சொல்வாரா . அதிமுக வ ஆதரிப்பாரா ? . இல்லை கம்முன்னு இருந்துடுவாரா ? ... 3 வது ஆப்ஷனும் 2 வது ஆப்ஷனும் வேற வேற இல்லன்னு புரிஞ்சா அதான் ப்குத்தறிவு

கருத்துகள் இல்லை: