சனி, 19 செப்டம்பர், 2020

" மனிதரின் வாழ்வியலும் அறிவியலும் கலையும் உறைந்திருக்கும் மூலதனம்தான் மொழி. மொழி அழிந்தால் மொழி வழி சினிமா கூட அழிந்துவிடும்"

 இன்று இந்திய சினிமா என்பது இந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மட்டுமே பெரிதும் உள்ளது . போஜ்பூரி வங்காளி மராத்தி பஞ்சாபி மொழி ஒரியா படங்களெல்லாம் ஓரளவு காணாமலே போய்விட்டன . 

இந்த மொழி பேசும் மக்கள் எல்லாம் இந்தி மொழியை பின்பற்றயதால் இவர்களின் சினிமா தொழில் அடியோடு காணாமல் போய் விட்டது.  சென்னையை மையமாக கொண்டு தென்னிந்திய சினிமா கருக்கொண்டதால் சகல தென்னிந்திய மொழி சினிமாக்களும் இந்தி ஆதிக்கத்தில் இருந்து தப்பி பிழைத்தது . அதுமட்டுமல்ல இவை இன்று இந்தி சினிமாவை பல வழிகளிலும் முந்துக்கொண்டுதான் செல்கிறது . தென்னிந்திய சினிமாவின் பல துறைகளும் இந்தி சினிமா வியாபாரத்தையும் கவனித்து கொள்கிறது . பல ஆயிரக்கணக்கான கோடிகளில்   வர்த்தகமும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பும் மாநில மொழி சினிமா துறை வழங்குகிறது. 

இந்தி ஆதிக்கத்தின் பின்னணியில் வெறும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல வடஇந்திய முதலாளிகளும் உள்ளார்கள்.   

குறிப்பாக குஜராத்தி பனியாக்களுக்கு மொழி என்பது பில்லியனுக்கு மேலான வாடிக்கையாளரை சுரண்ட வசதியாக இருக்கும் ஒரு ஊடகமாகும்  . பார்ப்பனருக்கோ சமஸ்கிருதத்திற்கு ஒரு முன்னோடி என்ற வியாதி . இரு சுயநலமிகள் பேராசை இந்த இந்தி ஆதிக்கத்தின் பின்னணியில் உள்ளது  

மாநில மொழிகள் அழிந்தால்மாநில பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் கூட காணாமல் போய்விடும் என்ற கோணத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் .

 " மனிதரின் வாழ்வியலும் அறிவியலும் கலையும் உறைந்திருக்கும் மூலதனம்தான் மொழி . மொழி அழிந்தால் மொழி வழி சினிமா கூட அழிந்துவிடும்" 


கருத்துகள் இல்லை: