செவ்வாய், 15 செப்டம்பர், 2020

கார்த்திக் சிதம்பரம் தன் நீட் ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்... இல்லையேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ..

                    Bilal Aliyar : சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் கார்த்திக் சிதம்பரம் அவர்களின் பழைய வீடியோ ஒன்றில், தான் நீட் தேர்விற்கு ஆதரவானவர் என வெளிப்படையாக பேசுகிறார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்தும், அதன் பாதகங்கள் குறித்தும், திமுக தலையிலான கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மா. கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், இஸ்லாமிய கட்சிகள் மற்றும் ஏனைய இயக்கங்கள் அனைத்தும் தீவிரமக பேசி, போராடி, நீட்டை ஒழிக்க பாடுபட்டு கொண்டிருக்கின்றன. நீட்டை கொண்டு வந்த அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக, ஆரம்பத்தில் நீட் ஆதரவு நிலைப்பாடு எடுத்து இன்று பல உயிர்களும், மாணவர்களின் கனவும் களவுபோவது கண்டு நடிகர் சூர்யா போன்றோரும் நீட்டை ஒழிக்க வேண்டும் என்று வெளிம்படையாக குரல் கொடுத்திருக்கின்றனர். 

தமிழ்நாட்டு மக்களுக்கு, மாணவர்களுக்கு நேரடியான இழப்பை உருவாக்கி, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் நீட் தேர்வை, விரும்பாத மாநிலங்கள் மீது திணிக்கப்படமாட்டாது என்று தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி..

இந்த நிலையில் அனைத்து சமுதாய சிவகங்கை மக்களின் வாக்கை பெற்ற கார்த்திக் சிதம்பரம் தன் நீட் ஆதரவு நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை வைக்கிறேன். அவர் தன்னுடைய நிலைப்பாட்டில் மாறாமல் இருக்கும் பட்சத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு திமுகவும், தோழமை கட்சிகளும் இது குறித்த தங்களின் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும் என் நட்பு வட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்களும், நண்பர்களும் கார்த்திக் சிதம்பரத்திடம் நீட் குறித்த பாதகங்களை எடுத்து சொல்லி அவருடைய நிலைப்பாட்டை மாற்ற உதவ வேண்டும் அப்படி இல்லாதபட்சத்தில் திமுக கூட்டணியின் தயவால் வென்ற தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தார்மீக ரீதியாக அவர் ராஜினாமா செய்து விட்டு, நீட்டை ஆதரிக்கும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் தேர்தலை சந்திக்கட்டும்.

ஏற்கனவே நீட்டுக்காக உச்சநீதிமன்றத்தில் நமக்கெதிராக வாதாடியவர் கார்த்திக் சிதம்பரத்தின் அம்மா நளினி சிதம்பரம் தான் என்ற வேதனையையே மறக்க முடியாத நிலையில், நம் ஓட்டை வாங்கி யாருக்காக அரசியல் செய்கிறார் கார்த்திக் சிதம்பரம் என்ற கோபம் வருகிறது..   

கருத்துகள் இல்லை: