வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கமலா ஹாரிஸும் இந்திய நிறவெறியின் இரு முகங்களும் ! அதிகாரத்திற்கு அருகில் செல்ல துடிக்கும் கும்பல்கள்.

மனுஷ புத்திரன் : அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.  இந்த செய்தி நேற்று முதல் அமெரிக்காவிலும், இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மத்தியிலும் பெரும் களிப்பின் அலைகளை ஏற்படுத்தி வருகிறது.         கமலா ஹாரிஸின் தாய் சென்னையை சேர்ந்தவர். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்...   கமலாவின் தாய் தன்னை ஒக்லாந்தின் கருப்பின கலாச்சாரத்திற்கு மாற்றிக் கொண்டார், அவர் தனது இரு மகள்களையும் கருப்பின கலாச்சாரத்தின் படியே வளர்த்தார் என்றும் கமலா தனது பேட்டி ஒன்றில் தெரிவிக்கிறார்.   ..  "எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்." என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார்.        "நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகத்தான் பார்க்கும் எனவே நாங்கள் தன்னம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என கமலா குறிப்பிட்டிருந்தார்.

தனது அடையாளம் குறித்து தனக்கு எந்த ஒரு அசெளகரியமும் இதுவரை ஏற்படவில்லை என்றும், எளிமையாக சொல்லவேண்டுமானால் `நான் ஒரு அமெரிக்கர்` என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிடுவார்.

மாட்டுகறியையும் பன்றி இறைச்சியையும் விரும்பி உண்ணுபவர் கமலா ஹாரிஸ் என்பது அவரை பற்றிய செய்திகளை வாசிக்கையில் அறிந்துகொள்ள முடிகிறது.

கமலா ஹாரிஸ்-அய் கொண்டாடும் தமிழ் பி

ராமணர்களின் மனநிலை என்பது அதிகாரத்தை சுவைக்க துடிக்கும் அல்லது அதை அடைய துடிக்கும் ஒரு வெறியாகவே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் மாட்டுக்கறியை உட்கொண்டால் வெட்டுவோம், அமெரிக்காவில் மாட்டுக்கறி உண்ணும் ஒருவரை கொண்டாடுவோம் என்பது ஒரு வெளிப்படையான ஏமாற்று தந்திரம் என்பது மீண்டும் ஒருமுறை வெளிப்படுகிறது.

கமலா ஹாரிஸ் இந்தியா வந்தால் அவருக்கு மாட்டிறைச்சியையும் பன்றி இறைச்சியையும் சமைத்து போட்டு குல்லா போடும் இந்த கூட்டம், அதிகாரத்திற்காக - அதிகாரத்தை அடைய எதையும் செய்யும்.

அமெரிக்க ஜனாதிபதியை கொண்டாடும் இந்தியர்கள் அவர் கமலா ஹாரிஸை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை வாசித்து விட்டு அவருக்கும் பதிலளிக்க வேண்டும்.

கமலா ஹாரிஸ் இன்று அமெரிக்க தேர்தலில் முன்னிறுத்தப்பட்டுள்ளது அவரது இந்திய வம்சாவளியை கொண்டாட அல்ல மாறாக அவரது கருப்பின வம்சாவளியை வைத்து BLACK LIVES MATTER மனநிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவே என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சோனியாவை இந்தியர் அல்ல என்று பழித்த அதே கூட்டம், இன்று கமலா ஹாரிஸை கொண்டாடுவதில் அவர்களின் போலியான இரு முகங்கள் வெளிச்சமாகிறது.

சோனியா எந்த வகையில் இந்தியர் அல்லர் அல்லது கமலா ஹாரிஸ் எந்த வகையில் இந்திய வம்சாவளி என்பதை இந்த மூடர் கூட்டம் நமக்கு பதிலளிக்க வேண்டும்??

 ஆசிரியர் கருத்து : ,   

அமெரிக்காவில் கருப்பு மக்களின் வெறுப்புக்கு இந்தியர்கள் ஏற்கனவே ஆளாகி உள்ளனர் .!

இந்த பார்ப்பனர்களின் ஜாதிவெறி நிறவெறியோடு இரண்டற கலந்தது ..

இதில வேற கமலா ஹாரிஸ் நம்ப ஆளுன்னு இவங்க எதாவது பேசப்போக அது அங்குள்ள கறுப்பு இன மக்களுக்கு தெரிந்தால் கோவிந்தா கோவிந்தா என்றாகி விடும் .

மக்களே கமலா ஹாரிஸ் நம்ப ஆளுன்னு ஆர்கசம் கட்டுறதை நிறுத்தினால் உங்களுக்கும் நல்லது கமலாவுக்கும் நல்லது .

மேலும் கமலா தன்னை ஓர் அமெரிக்க கருப்பு இனத்தவராகத்தான் கருதுவதாக தெரிகிறது ..

சியாமளா சொந்தங்களே கொஞ்சம் அடக்கி வாசிங்க . கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட கூடாது அல்லவா?

 சியாமளாவின் பார்ப்பன ஜாதியினர் மற்றும் பானிபூரிகளின் அகண்ட இந்தி பாரத சுய இன்ப பரப்புரைகள் எல்லாம் சேர்ந்து கமலா ஹாரிசுகு பெரிய பின்னடவை கொடுக்க கூடும் .

கமலா ஹாரிஸின் தெற்கு ஆசிய அடையாள உரிமை கோரல் என்பது ஏனைய இனத்தவர்களின் கோபத்தை கிளறி விடும் .

இந்த ஆர் எஸ் எஸ் சங்கி கூட்டத்தின் ஜோதியில் பாய்ந்து விழுந்து ஐக்கியமாகி உள்ளது தமிழ் தேசிய வியாதிகள் .

அத்தனை நாசத்தின் தொடக்கமும் தாமாகவே இருக்கவேண்டும் என்று கருதும் கொள்ளை வீரர்கள்

 

கருத்துகள் இல்லை: