அவர்கள் நேரடியாக ஆட்சி செய்து தமிழகத்தில் இவ்வாறு நடந்தால் தமிழகமே கொந்தளித்து இருக்கும்!
# தமிழகத்தில் பொருளாதாரமே முடங்கியுள்ளது. இந்த நிலையில் நன்றாக இருக்கும் பல சாலைகளை பழுது பார்ப்பதாகவும், போக்குவரத்தே இல்லாத பொட்டல் பகுதிகளுக்கு ரோடு போடுவதாகவும் 12,000 கோடியை ஒதுக்குகிறார்கள்…என்றால்…எவ்வளவு பேராசை…! எவ்வளவு சுயநலம்!
# இந்த மாதிரி பலவீனமானவர்களை முன்னிறுத்தி கொள்ளையடித்து கொழுக்கவிட்டு, ஆதரிப்பது!
# சுற்றுச்சூழல் அழிவுக்கான மசோதா…
# எளியவர்களின் வாய்ப்பை மறுக்கும் நீட் தேர்வு,
# அறிவுக்கும்,மனிதத்திற்கும் எதிரான கல்விக் கொள்கையை திணிப்பது,
# தமிழக மக்களின் வேலைவாய்ப்பை முற்றிலும் அபகரிப்பது…,
# திராவிடம் குறித்த வெறுப்புணர்வை வளர்ப்பது
# சிறுபான்மையினர் குறித்த பாகுபாட்டை நிலை நிறுத்துவது..!
இப்படியாக தமிழகத்தை பாஜகவின் வேட்டைக் காடாக மாற்றிக் கொள்ள செம தோதாக வழிவிட்டதே இவர்கள் இருவரின் சாதனையாகும்!
மத்திய ஆட்சியாளர்களுக்கு பணிந்து,வளைந்து அடிமை சேவகம் செய்வதில் தான் இருவருக்கிடையிலும் போட்டா போட்டி!
இந்த லட்சணத்தில் முதலமைச்சர் பதவிக்கு இருவருக்கும் போட்டியாம்!
இரண்டு பேரடிமைகளில் எந்த பேரடிமையை ஆதரிப்பது என்பதில் மற்ற அடிமைகள் அணிபிரிந்து போஸ்டர் யுத்தம்(அட்ட கத்தி) நடத்துகிறார்கள்!
நல்ல தைரியம் தான் போங்கள்! தமிழக மக்கள் அறியாமையின் மீது அவ்வளவு அழுத்தமான நம்பிக்கை போலும்!
சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக