கூட்டம் நடைபெற்ற இடம் : நுவரெலியா கூட்டுறவு சங்க விருந்தகம் ( Co- operative Resort - technical college Road )
பங்கு கொண்டோர் பெயர்ப் பட்டியல்.
த.அய்யாத்துரை ( தலைவர் - தொழிலாளர் தேசிய சங்கம்), பி . ஏ. காதர்
தொழிலாளர் முன்னணி ( மலையக மக்கள் முன்ணியில் இருந்து விலகி உருவாக்கிய
அமைப்பு. அவரோடு பொகவந்தலாவை அருளப்பன் இருந்தார்), பெ.சந்திரசேகரன் (
தலைவர் - மலையக மக்கள் முன்னணி ), அவருடன் கூட வந்தவர் எஸ். விஜேசந்திரன் (
இப்போது பேராசிரியர் த.மு.கூ உயர்பீட உறுப்பினர் ) வி.புத்திரசிகாமணி (
அப்போது ஐ.தே.க - LJEWU), இரா. தங்கவேல் ( ரொபர்ட் தங்கவேல் என அன்பாக
அழைக்கப்படுபவர் - எம்.எஸ்.செல்லச்சாமி உருவாக்கியிருந்த இலங்கை தேசிய
தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்), மனோகணேசன் ( அப்போது மேல் மாகாண மக்கள்
முன்னணியின் தலைவர்.
இந்த கூட்டத்தில் உருவான மலையக தேசிய கூட்டணி 2001 பெப்ரவரியில் (மூன்று மாத்த்தில் ) உடைந்தது. காரணம் மல்லிய்ப்புசந்தி சத்யாகிரக போராட்டத்தில் பெ. சந்திரசேகரன் - இ.தொ.கா வுடன் கைகோர்த்ததால். அப்போது எழுதப்பட்டதே “மல்லியப்பு சந்தி”.
2. 2006 ஆம் ஆண்டு
ஜனநாயக மக்கள் கூட்டணி கூட்டத்தின் அழைப்பாளர்கள் மலையக இளம் பட்டதாரிகள்
அமையத்தின் தலைவர் ம.திலகராஜா செயலாளர் வைத்தியர். ஜேசுதாஸ் தனராஜ் (
இப்போது அமெரிக்கா ) கூட்டம் நடைபெற்ற இடம் கோல்பேஸ் சுற்று வட்டத்திற்கு
நேரே AA Club ( Automobile Association ) மண்டபம். கூட்ட இடம் ஒழுங்கு
செய்தவர் பிரபா கணேசன் ( அப்போதைய மேலக மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர்
கூடவே இப்போதும் அவருடன் இருக்கும் கங்காதரன்). இவர்களோடு கூட்டத்தில்
கலந்து கொண்டவர்கள் மனோ கணேசன் ( தலைவர்), ஜெயரட்ணராஜா ( செயலாளர்),
தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக எஸ்.அருள்சாமி ( பொதுச்செயலாளர்), பழநி
திகாம்பரம் ( நிதிச் செயலாளர்). இவர்கள். இருவரும் மலையக மக்கள்.
முன்னணியில் இருந்து விலகி வந்த பின்னர் உருவாக்கப்பட்டு இருந்த
தொழிற்சங்கம் இது. இவர்களது இந்த பதவிகள் பெயரளவிலானது. அதற்கு காரணம்
மலையக மக்கள் முன்னணி இவர்களது மாகாண சபை பதவிகளை பறிக்க வழக்கு தொடரந்து
இருந்தது. உண்மையாக தலைவர் த.அய்யாத்துரை, செயலாளர் சிவலிங்கம் ( ட்ருப்
தோட்டம் தலவாக்கலை ) பொருளார் அவரது தம்பி ட்ரூப் குமார்.( இந்த
முன்னணிதான் இப்போது ரிஷி செந்தில்ராஜ் நடாத்தும் மலையக தேசிய முன்னணி
எனும் தொழிற்சங்கம். அஇது இங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல), தொழிலாளர் தேசிய
சங்கம் சார்பில் அப்போதைய தலைவர் புண்ணியமூர்த்தி, உபதலைவர் (பொகவந்தலாவை )
செல்வராஜா ( இப்போது சட்டத்தரணி). இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி
சார்பாக அதன் செயலாளர் எஸ.சதாசிவம். கூட்டத்தை தலைமை ஆசனத்தில் இருந்து
நெறிப்படுத்தியது திலகராஜ்.( கட்டுரையாளர்) . பொது சின்னமாக ஏணியைப்
பயன்படுத்துவதில் இருந்த சிக்கல் காரணமாக எஸ்.சதாசிவம் கூட்டத்தில் இருந்து
வெளியேற ஏனைய அமைப்புகள் இணைந்து ஜனநாயக மக்கள் கூட்டணியாக மேலக மக்கள்
முன்னணி யின் ஏணி சின்னத்தில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலை
எதிர்கொண்டோம். இந்த கூட்டணிக்கு ஆதரவாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர்
நாயகம் பதவியில் இருந்து வெளியேறியிருந்த எழுத்தாளர் மு.சிவலிங்கம்
பகிரங்கமாக களத்தில் இறங்கி பணி ஆற்றினார். வேட்பு மனு தயாரிப்பு பணியில்
கட்சி செயலாளர் என்ற வகையில் ஜெயரட்ணராஜாவின் பங்களிப்பு ம் அதனை
ஒழுங்கமைப்பதில் பிரபா கணேசனின் பங்களிப்பும் உயர்வானது. தொழிலாளர் தேசிய
சங்க ஹட்டன் காரியாலயத்தில் இரவிரவாக வேட்பு மனு தயார் செய்தோம். தேர்தல்
கூட்டணியான இது, அதற்கு பிறகு பெரிதாக தொடரவில்லை. ஆனால் பின்வரும் மூன்று
நிகழ்வுகள் முக்கியமானவை ஒன்று , அதுவரை மனோ கணேசனின் தலைமையிலான மேலக
மக்கள் முன்னணி என இருந்த கட்சி யின் பெயர் ஜனநாயக மக்கள் முன்னணி ஆனது (
தேர்தலில் கூட்டணி என பெயர் இருந்தது ). இரண்டாவது தேர்தல் முடிவுகளி்படி
தொழிலாளர் விடுதலை முன்னணி ஒன்பது ஆசனங்களையும் தொழிலாளர் தேசிய சங்கம் 1
ஆசனங்களையும் கைப்பற்றியது. பின்னர் அம்பகமுவையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் ஒருவர் நியமனம் பெற்றார், மூன்றாவது இந்த
தேர்தலின் பின்னர் தொழிலாளர் விடுதலை முன்னணி நிதிச் செயலாளர் பழநி
திகாம்பரம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என ஊடகங்களில்
அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே அவர் தொழிலாளர் தேசிய சங்கத்தில்
இணைக்கப்பட்டார். அதற்கான பேச்சுவார்த்தைகள் (2007) திலகராஜின் வத்தளை
வீட்டிலேயே இடம்பெற்றது.
3. 2009 ஆம் ஆண்டு புரிந்துணர்வு கூட்டணி -
மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ள ஜனநாயக மக்கள் முன்னணி + தொழிலாளர் தேசிய
சங்கம் புரிந்துணர்வு அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி யின்
யானைச்சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. இப்போது திலகராஜ்
தொழிலாளர் தேசிய சங்க - அரசியல் பிரிவு செயலாளர் என்றவகையில் கலந்து
கொண்டேன். மனோ கணேசன் அவர்களின் கொழும்பு இல்லத்திலேயே பேச்சுவார்த்தைகள்
நடந்தன. பிரபா கணேசன் அப்போதும் அங்கே கணிசமான பங்களிப்பு செய்தார். 2006
முதல் இருந்த புரிந்துணர்வு 2009 வேட்பு மனு தாக்கல் செய்ததோடு உடைந்து
போனது. எனினும் திகா - பிரகாஷ் கணேசன் - உதயா வெற்றி பெற்றார்கள். (இடையே
அப்போதே திலகராஜ் பெயர் வேட்பாளராக பரிசீலிக்கப்பட்ட கதை தனி. )
4.
2011 - மலையக கூட்டமைப்பு
மலையக மக்கள்
முன்னணியும் தொழிலாளர் தேசிய சங்கமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. கூட்டம் ஹட்டன்
Tea Villa வில் நடைபெற்றது. இரண்டு கட்சிகளும் கூட்டாக மண்வெட்டி + மயில்
என வேறுபட்ட சபைகளில் போட்டியிட்டோம். பேச்சுவார்தைகளில் தொழிலாளர்
தேசிய முன்னணி பொதுச்செயலாளர் திலகராஜ் பிரதிப் பொதுச் செயலாளர்
சுப்பிரமணியம், கிருஷ்ணா ( மொஹம்மட் சஹீம்) உள்ளிட்டோரும். மலையக மக்கள்.
முன்னணி சார்பில் அதன் தலைவி சாந்திணி சந்திரசேகரன் பொதுச்செயலாளர் லோரன்ஸ்
முலானோர் கலந்து கொண்டனர். தொழிலாளர் தேசிய சங்கத்தின் “மயில்” அப்போது
ரிசாட் பதியுதீன் கைகளுக்கு ஏற்கனவே ( 2000 - 2004 காலத்தில் )
கைமாற்றப்பட்டிருந்த நிலையில் அதன் உத்மியோகபூர்வமாக திலகராஜ்
அங்கீகரிக்கப்பட்டு அதன் செயலாளர் அவை.எஸ்.எல். ஹமீட் கையொப்பம் இட்டு
வழங்கி இருந்தார். ( இந்த 2020 சின்னத்தில் அவரும் ஊடகவியலாளர் முஷாரப்பும்
அம்பாரையில் இந்த மயில் சின்னத்திலேயே போட்டியிட்டு வந்தனர். இப்போது
அவர்களது கட்சிக்குரியது.)
இதே தேர்தலில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக
மக்கள் முன்னணியும் எஸ். சதாசிவம் தலைமையிலான தொழிலாளர் ஐக்கிய
முன்னணியும் புரிந்துணர்வு கூட்டணியாக செயற்பட்டு இருந்தன.
5. 2013
சப்ரகமுவ கூட்டமைப்பு - மாகாண சபைத் தேர்தல் பகுதி பகுதியாக
நடாத்தப்பட்டபோது இரத்தினபுரி , கேகாலை மாவட்டங்களில் தமிழ்
பிரதிநிதித்துவத்தை உருவாக்க ஒரு கூட்டணியை உருவாக்கும் எண்ணத்தோடு என்னை
அணுகிய கண்டி சமூக அபிவித்தி நிறுவன தலைவர் அழைப்பாளராக செயற்படுவதாக கூறி
கொழும்பில் ஒரு இடத்தை தயார் செய்யுமாறு கோரினார். அதன்படி வெள்ளவத்தையில்
அமைந்திருந்த நண்பர் மர்ஷூம் மௌலானாவின் ( இந்த 2020 பொதுத்தேர்தலில்
அம்பாரையில் குதிரை சின்னத்தில் போட்டியிட்டவர் ) பிரத்தியேக கல்வி
நிலையத்தில் இடம்பெற்றது. கலந்து கொண்டோர் மனோகணேசன் ( ஜனநாயக மக்கள்
முன்னணி - தலைவர்), பழநி திகாம்பரம் ( தொழிலாளர் தேசிய சங்க - தலைவர்)
வி.இராதாகிருஷணன் ( மலையக மக்கள் முன்னணி தலைவர்) திலகராஜ் , பெ .
முத்துலிங்கம் ( அழைப்பாளர்). “மர்ஷூம் மௌலானா எனது இலக்கிய நண்பர்.
அவரிடம் இப்படி ஒரு சிறிய மண்டபம் இருப்பதை அதற்கு ஒரு மாத திற்கு முன்பு
போல அப்போதைய தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் ஆற்றிய விசேட உரை
நிகழ்வுக்கு அங்கே சென்றபோது தெரிந்து கொண்டிருந்தேன். அந்த தொடர்பிலேயே
அந்த இடத்தை தெரிவு செய்தேன். “ பின்னர் சப்ரகமுவ ஆர்வலர்கள் பலர் ஒன்று
சேரந்து அந்த ஒழுங்குகள் பெரிதாகின. அடுத்தடுத்தகூட்டங்கள் கொழும்பு 5
ஜானகி ஹோட்டலில் நடைபெற்றன. இரத்தினபுரி ஜெயகர் போன்ற பல சமூக ஆர்வலர்கள்
அங்கே இருந்தனர். இ.தொ.காவையும் இணைத்துச் செல்லும் யோசனை
வந்தது.அவர்களுடன் பேச கல்வியாளர் எம்.வாமதேவன், தொழிலதிபர் முத்துசாமி (
இப்போது காலமாகிவிட்டார்) போன்றோர் பிரேரிக்கப்படனர். பின்னர் அவரது
அலுவலகத்தில் (கொழும்பு 2 bio tea )நடைபெற்ற கூட்டத்தில் இ.தொ.கா வைத்த
நிபந்தனைகளை எதிர்த்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக வந்த திலகராஜ்
வெளியேறியதோடு ஜனநாயக மக்கள் முன்னணி + மலையக மக்கள். முன்னணி + இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த இணைந்த சப்ரகமுவை தேர்தல் புரிந்துணர்வு
கூட்டணி மூலமே இரத்தினபுரியில் ( லலிதா) ராமச்சந்திரனும் கேகாலையில்
அண்ணாமலை பாஸ்கரனும் மாகாண சபைக்கு தெரிவாகினர். ஜனநாயக மக்கள் முன்னணி
யில் இருந்த பாஸ்கரனும் மலையக மக்கள் முன்னணியில் இருந்து வந்த
ராமச்சந்திரனும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அடையாளம் ஏற்றனர். தேர்தலுக்கு
முன்னரேயும்கூட.
6. 2015 தமிழ் முற்போக்கு கூட்டணி - பிரபல
தொழிலதிபர் நாடறிந்த காப்புறுதி யாளர் கொள்ளுப்பிட்டி பெருந்தோட்ட
உட்கட்டமைப்பு அமைச்சு காரியாலயத்துக்கு வந்து திரும்பும்போது Lift ல்
அவரைச் சந்தித்தேன். என்னை அவருக்கு தெரியாது. நான் அறிமுகப்படுத்திக்
கொண்டேன். என்ன விஷயமாக வந்தீர்கள் என்றேன். அமைச்சரை காணவந்தேன் யாரையும்
விசாரிக்கவும் ஆளில்லை. திரும்புகிறேன் என்றார். மன்னிப்புக் கேட்டு நான்
இணைப்பு செயலாளர் வெளியே சென்று வருகிறேன் என்றும் கட்சி செயலாளரும் நானே
என்றும் விஷயத்தைக் கேட்டேன். அப்போதே மனோகணேசன் உடன் பேசினேன்,
இராதாவோடும் திகாவோடும் பேசி ஒரு கூட்டணி அமைப்பதாக யோசிக்கிறோம். நான் ஆறு
விடமும் ( ஆறுமுகன் தொண்டமான்) பேசினேன். அவர் சாத்மியமில்லை. திகா
வந்தால் தான் வரமுடியாது என்கிறார். அதனால்தான் அவரைவிட்டு மற்றைய
மூவரையும் இணைக்க முயற்சிக்கிறோம் என்றார்.இதில் கண்டி முத்துலிங்கம்
போன்றோர் இருப்பதையும் சொன்னார். நான் அவருக்கு மேற்படி கூட்டணி வரலாறுகளை
சுருக்கமாக சொன்னேன். அப்படியா என ஆச்சரியமாக கேட்டவர் “ நான் சரியான
ஆளைத்தான் சந்தித்து இருக்கிறேன்” என எஞ்சியவை நடந்தன. இந்த
உருவாக்கத்தில் சண்.பிரபா, புத்திரசிகாமணி போன்றோரின் பங்களிப்பும் ஸ்தாபக
பொதுச்செயலாளராக லோரன்ஸ் இன் அர்ப்பணிப்பும் இங்கு குறிப்பிட்பட வேண்டியது.
நிதிச் செயலாளராக என்னைத் தெரிவு செய்ததும் சிரித்தேன்.எங்களது பாராளுமன்ற
உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள, உயர்பீட உறுப்பினர்கள், என பலரும்
கடந்த ஐந்தாண்டுகளில் இதன் வளரச்சிக்கு அர்ப்பணிப்பு செய்தவர்கள்.
இப்படி இருபது வருடகாலமாக கருக்கொண்டு உருவானதுதான் தமிழ் முற்போக்கு
கூட்டணி. இந்த இருபது வருட காலம் முழுவதும் எனது பாத்திரம் குறித்தும்
அதேபோல ஏனைய ஆளுமைகள் குறித்தும் பெயருடன் எழுதி உள்ளேன். மலையகத்தில்
கூட்டணி அரசியல் உருவாக்கம் தொடர்பில் எனக்கு உள்ள Institutional Memory
தான் இந்த குறிப்பு. இதில் பெயர் வரும் எல்லா அரசியல், தொழிற்சங்க, சிவில்
சமூக ஆளுமைகள் தங்களது memory க்கு இதனைக் கொண்னுவரலாம். இங்கு எங்காவது
திலகராஜ் இல்லாத ஒன்றைச் சொல்கிறார் என மறுத்து சரி செய்யும் உரிமை
உடையவர்கள். சாட்சிகளும் கூட.
வரலாற்றில் எனது வகிபாகத்தை உணர்ந்தே
தமிழ் முற்போக்குத் கூட்டணி தலைவர் மனோ கணேசன் சூரியன் விழுதுகள்
நிகழ்ச்சியில் என் மீதான நம்பிக்கையினை வெளிப்படுத்துகிறார்.
இந்தப்
இருபது வருட வரலாற்றில் அவரும் பயணம் செய்து இருக்கிறார். வேறு ஆளுமைகளின்
பெயர்களை நினைவு வரும்போதும் இணைப்பேன். அல்லது நினைவு வருபவர்கள் எனக்குத்
தெரிவித்தால் ஏற்றுக் கொள்வேன்.
“தமிழ் முற்போக்கு கூட்டணி 20 ஆண்டுகால முயற்சியின் அறுவடை” அது மலையக சமூகத்தின் சொத்து.
இதற்காக எனக்கு தேசிய பட்டியலில் இடம் கேட்கவில்லை என்பதை உறுதியாகக்
கூறுகிறேன்.மக்களின் உரிமையை மீட்டு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத மலையக
மக்களது பிரதிநித்துவத்தை உறுதி செய்ய வேண்டியது மூன்று தலைவர்களினதும்
பொறுப்பும் கடமையும்.
( இந்தப் பதிவை மீள்பிரசுரம் செய்யும்
அனுமதி வழங்கப்படுகிறது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக