செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

பாலகுரு சாமி என்ற ஒரு ....

Munusamy Gauthaman : "உங்களுக்கு முன்னாடி தட்டுல இட்லியும், சாம்பாரும்

வைச்சிருக்காங்க... கைய பயன்படுத்தக்கூடாது... அதே வேளை ஸ்பூனையும் பயன்படுத்தக்கூடாது.... எப்படி சாப்பிடுவீங்க???? 

இப்படி ஒரு கேள்வியை கேட்டவர் யாரு தெரியுமா!!!!!     பாலகுருசாமி எப்போ கேட்டாரு தெரியுமா!!!!       அவரு UPSC member ஆ இருந்தப்போ ஐஏஎஸ் இன்டெர்வியூக்கு சென்ற தமிழக இளைஞரிடம் இந்தக் கேள்வியை கேட்டார். அந்த இளைஞர் ஐஏஎஸ்மெயின் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர். 300 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட (இப்போ 275)    அன்றைய இன்டெர்வியூல மிகச் சிறந்த மார்க் 210.... 220... நன்றாக பதில் சொல்பவர்களுக்கு 180....170

ரொம்ப சுமாராக பதில் சொன்னால் 150...130..

மோசமாக பதில் சொன்னால்.... 110...100

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த இளைஞனுக்கு இன்டர்வியூல 130 மார்க் போட்டிருந்தால் அவருக்கு IRS கிடைத்திருக்கும்.... 180 மேல் பெற்றிருந்தால் ஐஏஎஸ் ஆகியிருப்பார்.

ஆனால் அந்த இளைஞனுக்கு பாலகுருசாமி கொடுத்த மார்க் வெறும் 75....

அதே காலகட்டத்தில் அடுத்த ஆண்டில் டெல்லியில் ஆர்எஸ்எஸ் நடத்தும் சங்கல்ப் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்த அண்ணாமலைக்கு யுபிஎஸ்சி இன்டெர்வியூ போர்டு வழங்கிய மதிப்பெண் எவ்வளவு தெரியுமா???!!!

240.....

அண்ணாமலை மெயின் தேர்வில் குறைவான மதிப்பெண் தான் பெற்றிருந்தார். இன்டெர்வியூல வாங்குன 240 தான் அவரை ஐபிஎஸ் ஆக்கியது....

இப்போ அண்ணாமலை கொடுக்கிற பேட்டிய பாத்தா.... 240 மார்க் எப்படி போட்டாய்ங்கன்னு சந்தேகமா இருக்கு....

சங்கல்ப்....சங்கல்ப்.....

பாலகுருசாமி 75 மதிப்பெண் போட்டு தூக்கி எறிஞ்சாருல அந்த இளைஞன்......வைராக்கியத்தோடு......விடா முயற்சியில், கடின உழைப்பில் அடுத்த தேர்வில் அந்த இளைஞன் வெற்றி பெற்றான் .....

அந்த இளைஞன் தற்போது தமிழ்நாடு அரசில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: