புதன், 12 ஆகஸ்ட், 2020

விபி துரைசாமியின் ‘திமுக vs பாஜக’ கருத்து - ‘சிலர் கனவு உலகத்தில் வாழ்கின்றனர்’ கனிமொழி பதிலடி

 மாலைமலர் :   தமிழகத்தில் இனி திமுக vs பாஜக என்ற விபி துரைசாமியின் கருத்துக்கு சில பேர் கனவு உலகத்தில் வாழ்கின்றனர் என திமுக எம்.பி. கன்மொழி பதிலடி கொடுத்துள்ளார்.  சென்னைவிபி துரைசாமியின் ‘திமுக vs பாஜக’ கருத்து - ‘சிலர் கனவு உலகத்தில் வாழ்கின்றனர்’ கனிமொழி பதிலடி: சென்னையில் பாஜக தலைமையகத்தில் செய்தியார்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, ‘பாஜக தேசிய கட்சி என்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி. பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜகவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ? அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும். தமிழகத்தில் அதிமுக vs திமுக என்ற நிலை மாறி தற்போது பாஜக vs திமுக என்ற நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார். ஜக துணைத்தலைவரின் இந்த கருத்து அஇஅதிமுக மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. >இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம் பாஜக துணைத்தலைவர் விபி துரைசாமியின் ’திமுக vs பாஜக’ கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த திமுக எம்.பி. கனிமொழி ‘சில பேர் கனவு உலகத்தில் வாழ வேண்டுமென்றால் வாழட்டும். அதைபற்றி கவலை இல்லை’ என தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை: