திங்கள், 10 ஆகஸ்ட், 2020

62 ஏக்கர் சங்கி கவுண்டர் ஆட்டுக்கார அண்ணாமலைக்கு .. இப்படிக்கு ஒரு ஏழை கவுண்டர்

Shankar A :
· அன்புள்ள 62 ஏக்கர் சங்கி கவுண்டர் ஆட்டுக்கார அண்ணாமலைக்கு OBC கோட்டாவில் தான் நீங்கள் IPS ஆனதாக பெருமையடன் சொன்னீர்கள். ஆனால் இட ஒதுக்கீட்டு எதிர்பாளர்கள் சொல்லும் கீரீமி லேயர் அமல் படுத்தபட்டிருந்தால் நீங்கள்  IPS ஆகியிருக்க முடியாது, ஆட்டு பண்ணை மட்டும் தான் மிஞ்சியருக்கும். உங்களை போல் அரிய வகை ஏழை கவுண்டர்கள் மிகவும் குறைவு. 90 சதவீதமான கவுண்டர்கள் 2 அல்லது 3 ஏக்கருக்கு குறைவாக உள்ளவர்கள். வருமானம் இல்லாததால், திருப்பூர் பனியன் கம்பனியில் வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளம். சரியான தொழில் இல்லாததால் 40 வயதாகி திருமணமகாமல் உள்ளவர்களும் அனேகம். உங்கள் ஊரான கரூரிலும் தாராபுரம் வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பொய்த்து போனதால் லைனுக்கு போகிறேன் என்று கடன் வாங்கி கோவை திருப்பூர் கேரளாவில் வட்டி தொழில் செய்து வசூல் ஆகாமல், ஊருக்கு செல்ல முடியாத கவுண்ட தம்பிகள் அனேகம்.

2 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் மருத்துவ மேல்படிப்பு படிக்க சென்ற திருப்பூர் சரவணன் என்ற கவுண்டர் தம்பி உயர்சாதி லாபியால் கொல்லபட்டதும், தங்களது இந்து ஜி க்கள் மூடி கொண்டு இருந்ததும் உங்களுக்கு தெரியாது.  தங்களுக்கு தெரியாது கவுண்டர் இட ஒதுக்கீடு வரலாறு. ஏனென்றால் நீங்கள் உயர்சாதி நியோ மேட்டுகுடி கவுண்டர்.

1974-75-ல் அனைத்துக் கட்சியிலும் உள்ள கொங்கு வெள்ளாளர் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் அனைவரும் கோரிக்கை
மனுவில் கையெழுத்திட்டு முதல்வர் கலைஞரிடம் அளித்தனர். அப்பொழுது அமைச்சர் கண்ணப்பன் அவர்களும் உடனிருந்தார்.

கொங்கு வெள்ளாளர் கோரிக்கை மனுவில் கீழ்கண்ட MLA கையெழுத்திட்டு கொடுத்தார்கள்.

1. என். நாச்சிமுத்து ,ஒட்டன்சத்திரம் தொகுதி
2. ளு. நல்லுசாமி, கரூர்
3. ஆ. சின்னுசாமி, மொடக்குறிச்சி
4. என்.மு.பழனிசாமி, பெருந்துறை
5. ஆ சுப்பரமணி,ஈரோடு
6. என். பழனிசாமி, பொங்கலூர்
7. சுப்பரமணியம், சத்தியமங்கலம்
8. ஏ.மு. ராமசாமி ,பவானிசாகர்
9. ளு.ஆ. பழனியப்பன், கோபி
10. யு.ஆ. இராஜா, பவானி
11. அப்பன் பழனிசாமி, வெள்ளகோவில்
12. பி. சண்முகசுந்தரம், பொள்ளச்சி
13. மாணிக்கவாசகம், தொண்டாமுத்தூர்
14. ஊ.ஏ. வேலப்பன்,கபிலர்மலை
15. சின்ன வெள்ளைய கவுண்டர், சேந்தமங்கலம்
16. நைனாமலை, இராசிபுரம்
17. பழனிவேல் கவுண்டர், ஆத்தூர்
18. நு. ஆ. நடராசன், அந்தியூர்
19. மு. முத்துசாமி,வேடச்சந்தூர்
20. குமாரசாமி, பல்லடம்
21. ளு. துரைசாமி, திருப்பூர்
22. செ. கந்தப்பன், திருச்செங்கோடு
23. கோவை செழியன், காங்கயம்
24. அப்துல் ஜபார்,அரவக்குறிச்சி
25. பாவலர் முத்துசாமி எம்.பி., நாமக்கல்
26. மு. கண்ணன் எம்.பி., சேலம்
27. செ. முத்துசாமி எம்.எல்.சி., நாமக்கல்

முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ அப்துல் ஜபார் அவர்கள் கொங்கு வெள்ளாளர் கோரிக்கைக்கு ஆதரவாக கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு தந்தார்.

1975-ஆம் ஆண்டில் சட்டசபையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்தபொழுது கொங்கு வெள்ளாளர் எம்.எல்.ஏ.க்கள் கோவை செழியன் மற்றும் செ. கந்தப்பன் முதல்வரிடம் கோரிக்கையை ஏற்குமாறு கேட்டுக்கொண்டனர்.

சட்டசபையில் அன்றைய தினம் முதல்வர் கலைஞர் அவர்கள் கொங்கு வெள்ளாளர் கோரிக்கையை ஏற்று கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்தார்.

அனைத்து உட்பிரிவுகளையும் உள்ளடங்கிய கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தெளிவான அரசாணையாக 16.05.1975 அன்று கலைஞரின் தமிழக அரசு வெளியிட்டது.

அதன் பிறகுதான் கொங்கு வெள்ளாளர் இனத்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள், மருத்துவம், பொறியியல்
போன்ற கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைக்க ஆரம்பித்தது.

உங்களுக்கு கோவையில் உள்ள தொகுதியில் MLA சீட்டு கொடுப்பதாக உறுதியளிக்கப்படுள்தாக அறிகிறேன். உங்கள் முதல்வர் ஆசைக்காக கவுண்டர் மக்களின் கோடாரி காம்பாக மாறாதீர்கள். ஏற்கனவே ஒரு ஏழை கவுண்டரின் இடத்தினை நாசம் செய்தது போதும். உண்மையான அக்கறை இருந்தால் OBC கோட்டாவை அமல்படுத்துமாறும் EWS என்று OBC திருடிய இடங்களை திருப்பி கொடுக்கமாறும் உங்கள ஜி யிடம் கேளுங்கள்.

உங்களைப் போல 62 ஏக்கர் இல்லாத
ஒரு ஏழை கவுண்டர்

கருத்துகள் இல்லை: