ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

இந்தியாவில் 5 விமான ஓடுபாதைகள் ஆபத்தான டேபிள் டாப் விமான நிலையங்கள்: ஏஏஐ அதிகாரி

   தினமலர் : புதுடில்லி: இந்தியா முழுவதிலும் டேபிள்டாப் ஓடுபாதைகள் கொண்ட விமானநிலையங்கள் 5 இடங்களில் உள்ளன என இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 7 ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானி உட்பட 19 பேர் வரை பலியாகினர். இச்சம்பவம் குறித்து ரஷ்யா, அமெரிக்கா,பாக்., உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 இதனிடையே விமான நிலையத்தின் ஒடுதளம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அர்விந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோழிக்கோடு விமானநிலையத்தின் ஓடு பாதை டேபிள் டாப் வகையை சேர்ந்தது. இத்தகைய ஓடுபாதைகள் விமானிகளுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தகூடியவை. நாட்டில் மொத்தம் 5 இடங்களில் டேபிள் டாப் வகை விமான ஓடுதளம் அமைந்துள்ளது.கேரளா மாநிலம் கோழிக்கோடு, கர்நாடக மாநிலம் மங்களூரு, இமாச்சல பிரதேசம் சிம்லா , சிக்கிம் மாநிலத்தின் பாக்கியோங் மற்றும் மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான நிலையம் ஆகியவையாகும்.

இவற்றில் முதல் நான்கு விமான நிலையங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான நிலையம் அந்தமாநில அரசின் கட்டுப்பாட்டில்இயங்கி வருகிறது. கடந்த 2010 ம் ஆண்டில் கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து நீதிமன்ற விசாரணை அறிக்கையில் அச்சமயத்தில் மூன்று இடங்களில் மட்டுமே டேபிள் டாப் விமான ஓடுதள பாதை உள்ளதாக கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த வகை ஓடுதள பாதை கொண்ட விமானநிலையங்களின் எண்ணிக்கை ஐந்து ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு அவர் கூறி உள்ளா நாட்டில் மொத்தம் 5 இடங்களில் டேபிள் டாப் வகை விமான ஓடுதளம் அமைந்துள்ளது.கேரளா மாநிலம் கோழிக்கோடு, கர்நாடக மாநிலம் மங்களூரு, இமாச்சல பிரதேசம் சிம்லா , சிக்கிம் மாநிலத்தின் பாக்கியோங் மற்றும் மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான நிலையம் ஆகியவையாகும்.

இவற்றில் முதல் நான்கு விமான நிலையங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான நிலையம் அந்தமாநில அரசின் கட்டுப்பாட்டில்இயங்கி வருகிறது.

கடந்த 2010 ம் ஆண்டில் கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து நீதிமன்ற விசாரணை அறிக்கையில் அச்சமயத்தில் மூன்று இடங்களில் மட்டுமே டேபிள் டாப் விமான ஓடுதள பாதை உள்ளதாக கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த வகை ஓடுதள பாதை கொண்ட விமானநிலையங்களின் எண்ணிக்கை ஐந்து ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு அவர் கூறி உள்ளா

கருத்துகள் இல்லை: