All most all of Ambedkar followers does not want to give up Hindu religion We all name our caste on our forehead and talking about abolishing it
Karthikeyan Fastura : மிகச்சரியாக சொன்னீர்கள். ஆனால் இந்த சாதிய சமூகத்தின் மீது விமர்சனம் வைக்கும்போது தான் அதிலிருந்து வெளியேற வேண்டும் என்ற வேட்கை பிறக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற விவாதம் தோன்றும்.
நான் இப்போது சொல்வது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். ஆனால் சமூக பொருளாதார பார்வையில் சாதிவாரி இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். சாதி நுணுக்கமாக இருக்கும்போது இடஒதுக்கீடு மட்டும் மேலெழுந்தவாரியாக இருப்பது எப்படி சரிசமமான பலனை கொடுக்கும். குறைந்தபட்சம் இப்போது இருக்கும் இடஒதுக்கீடாவது கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். ஜெனரல் கேட்டகரியில் ரேங்கிங் அடிப்படையில் எல்லோரும் அனுமதிக்கப்பட வேண்டும். அது அரசியல்அமைப்பு சட்டம் சொல்கிறது. நடைமுறையில் இது உயர்சாதிகளுக்கு மட்டும் என்று அநீதியாக சுருக்கிவிடுகிறார்கள். அதாவது நல்ல ரேங்கிங்கில் வந்த ஒரு OBC, SC/ST பொதுபிரிவில் விடாமல் அவர்களை இடஒதுக்கீட்டில் தள்ளிவிடுகிறார்கள்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான EWS நீக்கப்பட வேண்டும்.அப்படியும்
அது வேண்டும் என்று வாதிட்டால் கலப்பு திருமணங்கள் செய்த மக்களுக்கு
மட்டுமே EWS என்பது கொடுக்கப்பட வேண்டும். அது தான் சரி.
கலப்பு திருமணம் என்பது இயல்பாகாத வரை சாதி ஒழியாது. சாதிய சமூகத்தைவிட்டு உளப்பூர்வமாக
வெளியேற விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் பிள்ளைகளின் உறவுகளின் காதல் திருமணத்தை வரவேற்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அதை இயல்பென்று சொல்ல வேண்டும்.நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல குணம், செல்வசெழிப்பை கூட மாப்பிள்ளை அல்லது பெண்ணிற்கு தகுதியாக வைக்கலாம் ஒருபோதும் சாதியை/ மதத்தை தகுதியாக வைக்க கூடாது. இந்த உறுதியை கண்டிப்பாக எடுக்கவேண்டும்
உங்கள் இரண்டாவது கேள்விக்கு பதில்
அம்பேத்காரிகள் இந்து மதத்தைவிட்டு வெளியேற விரும்பவில்லை என்றால் இந்துமதத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை அல்லது அம்பேத்காரை முழுமையாக படிக்கவில்லை என்று பொருள். ஏனென்றால் இந்துமதத்தை தூய்மைபடுத்தவே முடியாது. FRIENDS படத்தில் வடிவேலு கருப்புமையில் விழுந்துவிடுவார். அவரை துடைத்து எடுப்பார்கள். ரமேஷ்கண்ணா சொல்வார் " ரெம்ப சுரண்டாதீங்கடா..தோல் உறிஞ்சுடப்போகுது. அந்தாள் கலரே அப்படித்தான்" என்று. அது போல தான் இந்து மதமும். மேலும் இந்து மதம் பல நம்பிக்கைகளின் கூட்டு. அதனால் தான் இது polytheism ஆக இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இதை வரையறுக்கும் போது முஸ்லீம், கிறித்துவர்கள் அல்லாத அனைவரும் இந்துக்கள் என்று சொல்லிவிட்டனர். என்ன காரணத்தினாலோ அம்பேத்காரும் இதையே அரசியல் அமைப்பு சட்டம் எழுதும்போதும் வழிமொழிந்துள்ளார். இதன்படி புத்தமதம் கூட தனித்த மத அடையாளம் கிடையாது. மதமற்றவர்கள் கூட சட்டப்படி இந்துமதத்திற்குள் தான் வருகின்றனர் ( வழக்கறிஞர்கள் இதில் முரண் இருந்தால் தெளிவுபடுத்துங்கள் )
ஆயிரம் ஆண்டுகள் சாதிய பிரச்சாரம் நடந்துள்ளது. அதை தொழில்நுட்பத்தின் உதவியால் அறிவியல் உதவியால் எதிர்ப்பிரச்சாரம் செய்து சமத்துவத்தை பிரச்சாரம் செய்கிறோம். சாதியவாதிகளும் நமக்கெதிராக தொழில்நுட்பத்தை பயன்படுத்திவருகின்றனர். நம்முடைய பலம் என்பது உண்மை, அறிவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவுமான உண்மை சமத்துவத்தின் பக்கம் நிற்கிறது. போராடுவோம். இந்த போராட்டம் ஒரு நூற்றாண்டை தான் தாண்டி இருக்கிறது. இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது வேண்டும். அதுவரை கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காமல் போராடுவோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக