ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கொரோனா பரவ மத மாநாடு காரணம் என பிரச்சாரம் செய்த இளைஞர் சுட்டுக்கொலை வீடியோ


வெப்துனியா :கொரோனா பரவுவதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு காரணம் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அந்த இளைஞர் தனது வீட்டின் வெளியே நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் இரண்டு பேர்களை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: