செவ்வாய், 7 ஏப்ரல், 2020

ஊரடங்கு வரும் 14 ஆம் தேதியோடு முடிவுக்கு வர வாய்ப்பில்லை?

Karthikeyan Fastura : இந்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதியோடு முடிவுக்கு வரப்போவதில்லை என்று எண்ணுகிறேன். நோய் பரவும் வேகம் இப்போது 4.2 நாட்களுக்கு ஒரு முறை இருமடங்காக அதிகரித்து வருகிறது இந்தியாவில்.
வரும் ஜூன் மாதம் இறுதி அல்லது அதிகபட்சம் செப்டம்பர் மாதம் வரை இந்த ஊரடங்கு விலக்கப்பட வாய்ப்பு குறைவு என்று American consultancy firm BCG என்ற நிறுவனம் எடுத்த ஆய்வு கூறுகிறது.
என் கணிப்பு என்னவென்றால் கொரோனா பாதிக்கப்படாத மாநிலங்கள் மட்டும் முதலில் இந்த ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படும். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள். அவை கூட அடுத்தமாத இறுதி ஆகும் என்று எண்ணுகிறேன்.
மகாராஷ்டிராவும், தமிழகமும் தான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வருவதால் இவைகள் இறுதியாக அதாவது ஜூன் கடைசியில் அல்லது ஆகஸ்ட்டில் ஊரடங்கு விடுவிக்கப்படலாம் என்று எண்ணுகிறேன். அதுவரை பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களின் தேர்வுகளும் தள்ளிப்போகும் . நீட் தேர்வும் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது.
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை, தொழில் முடக்கத்தை, வேலைவாய்ப்பு இழப்பை தமிழகம் சந்திக்க இருக்கிறது. பெரும் தொழில் அதிபர்கள் முதல் தொழில்முனைவோர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறுதொழில், குறுந்தொழில் செய்வோர் அனைவரும் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.
ஏனென்றால் மத்திய அரசும் நம் மாநில அரசும் கூறுவாரு இல்லாத அரசுகள். பரந்துபட்ட பார்வையோ, செயல் நுணுக்கமோ, பொருளாதார சமூக சங்கிலி பற்றிய புரிதலோ இல்லாத அரசுகள். நம்மை அன்றி யாரும் நம்மை காப்பாற்றபோவதில்லை

கருத்துகள் இல்லை: