சனி, 11 ஏப்ரல், 2020

இலங்கை ஊரடங்கால் தேங்கும் விவசாய உற்பத்திகள் ..

Jeevan Prasad : பொருளாதார மையங்கள் குறித்த அரச நடைமுறைகள்
சரியில்லை! விவசாயிகள் நிலை பரிதாபம்!
நாட்டில் உணவு பற்றாக்குறை உள்ளது. அது அடுத்த மாதம் முதல் கடுமையான ஒரு நிலைக்கு நிச்சயம் தள்ளப்படும். அதை அரசு உணர்ந்துள்ளது.
இப்படி உணர்ந்தும் இதுவரை உற்பத்தி செய்த மரக்கறிகளை விற்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. நெல் போல மரக்கறியை வைத்திருக்க முடியாது. அதையாவது அரசு உணர வேண்டும். விவசாயிகள் தங்கள் மரக்கறிகளை கொண்டு வந்து சந்தைப்படுத்தும் பொருளாதார மையங்களை அரசு மூடி விட்டது.
அப்படியானால் இதுவரை தோட்ட தொழில் செய்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட மரக்கறிகளை என்ன செய்வார்கள்?
ஒன்று அரசே வாங்கி மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் அல்லது பொருளாதார மையங்களை வாரத்தில் குறிப்பிட்ட ஓரிரு நாட்களாவது திறந்து விற்கவும் - வாங்கவும் வழி செய்ய வேண்டும்.

அப்படியில்லாது போனால் விவசாயிகள் எதையும் பயிரிட மாட்டார்கள். விளைத்ததை விற்றால்தானே விதைப்பதற்கு கையில் பணம் இருக்கும்? பணம் இல்லாத போது இருப்பதைக் கொண்டு சாப்பிடுவதா? இல்லை விதைப்பதா? அரசு நிவாரணம் வழங்கலாம் என நினைக்கிறதா? ஒன்றுமே புரியவில்லை.
கொரோணாவோடு வந்தவர்களை விமான நிலையத்தால் உள்ளே வர விட்ட பிறகு அப்போது தேடித் திரிவது போல , இன்னும் கொஞ்ச நாளில் உணவு இல்லாத நிலை வந்து பஞ்சத்தில் தத்தளிக்கும் போது பயிரிடுங்கள் என அரசு முகாரி ராகம் பாடப் போகிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகள் தங்கள் உற்பத்திகளை எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யும் என்ற நம்பிக்கை இல்லை. இப்போது அனைத்து நாடுகளும் கொரோணாவால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவில்லாத போது ஏற்றுமதிகள் செய்ய மாட்டார்கள். அதையாவது யோசிக்க வேண்டும்.
வெறுமனே மேசையில் உட்கார்ந்து ஊடக சவடால்களாக உள்ளூர் உற்பத்திகளை பெருக்குவோம் எனச் சொன்னால் மட்டும் போதாது. அதற்கு ஒரு நல்ல சந்தையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நேரத்தில் சரியான திட்டம் இருக்க வேண்டும். எல்லாம் காலம் தாழ்ந்த அறிவாகவே காண முடிகிறது.
கொரோணா முடிந்ததும் ஒரு பெரும் பஞ்சம் நாட்டில் தலை விரித்தாடப் போகிறது என்பது மட்டும் 100 சத வீதம் உண்மை! மக்கள் அதிகம் கஸ்ட்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள்.
- ஜீவன்

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறப்பான செய்தி கண்ணோட்டம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்