புதன், 8 ஏப்ரல், 2020

பிரான்ஸ் ஒரே நாளில் 1400 பேர் உயிரிழப்பு - 10 ஆயிரத்தை கடந்த எண்ணிக்கை... நிலை குலைந்த பிரான்ஸ்

கோப்பு படம்ஒரே நாளில் ஆயிரத்து 400 பேர் பலி - 10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... நிலை குலைந்த பிரான்ஸ்மாலைமலர் : பிரான்ஸ் நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 417 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. பாரிஸ் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 14 லட்சத்து 20 ஆயிரத்து 641 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து ஆயிரத்து 516 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 லட்சத்து 37 ஆயிரத்து 502 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 81 ஆயிரத்து 623 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது ஐரோப்பிய நாடுகளை திணறடித்து வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.


இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. 

அந்நாட்டில், வைரஸ் தாக்குதல் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 417 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது

கருத்துகள் இல்லை: