வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கொரோனா எச்சரிக்கையை அலட்சியம் செய்த அமெரிக்க அதிபர் .. ஜனவரியிலேயே ..


வீரகேசரி :கொரோனா வைரஸ் முழுமையான நோய் தொற்றாக மாறி மில்லியன் கணக்காணவர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் டிரில்லியன் டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவரோ ஜனவரி மாத பிற்பகுதியில் எச்சரித்தமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் இரு தடவை வைரஸ் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை அனுப்பியுள்ளார்.
முதல் அறிக்கையில் கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை சுட்டிக்காட்டியுள்ளார். அரைமில்லியன் அமெரிக்கர்கள் உயிரிழக்கலாம் என எச்சரித்திருந்த அவர் இரண்டாவது அறிக்கையில் 1.2 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.
ஜனவரி மா நடுப்பகுதியில் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் சீனாவிற்கான போக்குவரத்து தடையை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரும் சில அதிகாரிகளும் முன்னரே வலியுறுத்த ஆரம்பித்திருந்தனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிக்கையை அலட்சியம் செய்திருந்த நிலையில் இரண்டாவது அறிக்கையொன்றை அனுப்பியிருந்த நவரோ உலகளாவிய நோய் தொற்று ஆபத்து அதிகரிக்கின்றது என அதில் சுட்டிக்காட்டியிருந்தார் என சிஎன்என் தெரிவித்துள்ளது. டிரம்பின் வர்த்தக ஆலோசகர் மாத்திரமின்றி வேறு பல அதிகாரிகளும் எச்சரித்திருந்தனர் சிஎன்என் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: