இலக்கத்தை தொட்டுவிட்டது. தனிமைப்படுத்துதல் நிகழ்ந்தபிறகும் வேகம் குறையாமல் பரவுகிறது. பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. மூன்றாம் உலகநாடுகளான இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் சரியாக திட்டமிடப்படாத ஊரடங்கினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். ஒரு பக்கம் வைரஸ் நோய் மறுபக்கம் வருமான இழப்பினால் உண்டான பொருளாதார சிக்கல் என்று இரண்டுக்கும் இடையில் மனித சமூகம் இன்று நசுங்குகிறது.
உலகப் பொருளாதாரம் மொத்தமும் முடங்கி போயுள்ளதால் எழுந்துள்ள பொருளாதார சிக்கல் என்னும் பெரும் சுனாமி அலை வேறு வந்துகொண்டிருக்கிறது. நோயில் இருந்து தப்பினாலும் இதிலிருந்து மீள உலகத்திற்கு மிகப் பெரும் வலிமை வேண்டும் சிறிதுகாலம் வேறு பிடிக்கும். இது அத்தனையிலும் தாக்குப்பிடித்து மீளும்போது பெரும் உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படும்.
இதை தாக்குப்பிடிக்க ஒருவரை ஒருவர் கரங்களை இறுகப்பற்றிகொள்ள வேண்டும்.
மனிதர்களை அதிகம் சம்பாதித்துக்கொள்ளுங்கள். உறவுகள், நட்புகளுக்குள்
இருக்கும் பிணக்குகளை மறந்து அன்புகொள்ளுங்கள். சின்ன சின்ன உதவிகள் செய்ய
மறக்காதீர்கள். சின்ன சின்ன விட்டுக்கொடுக்கல்களுக்கு தயங்காதீர்கள்.
அடித்தட்டு மக்களிடம் அன்பு கொள்ளுங்கள். அவர்கள் சர்வைவலில் மற்ற
எல்லோரையும் விட சிறந்தவர்கள். அவர்களின் ஆதரவு எப்போதும் இருக்க வேண்டும்.
அது நீங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் தான் கிடைக்கும்
பழம் விற்க ஒருவர் வருகிறார் என்றால் கடையை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கும் பரவாயில்லை வாங்குவோம். கேஸ் சிலிண்டர்காரர் 20 ரூபாய் கூடுதலாய் கேட்டால் இந்த நேரத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள். வீட்டுபணியாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள். நம்மை சுற்றியுள்ள பலசரக்குகடை, பெட்டிக்கடைகாரர்களுடன் இப்போதாவது நட்பு பாராட்டுங்கள். இன்று எங்களால் எளிதாக நம்பிக்கையாக இந்த கடும் சோதனை காலத்தை கடக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் இப்படி பழகி வைத்தது தான்.
Investment பற்றி நான் இங்கு எழுதாத விஷயங்கள் இல்லை. ஆனால் எல்லா Investmentகளை விட
முக்கியமான Investment சகமனிதர்களின் மீதான அன்பு. அதற்காக இன்று செய்யும் சிறு சிறு உதவிகள், விட்டு கொடுக்கல்கள், ஆதரவுகள் எல்லாமே கூட முதலீடு தான். உங்கள் வட்டத்தில் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படும் என்று யோசித்து அதில் உங்களால் ஆகக்கூடிய உதவி சிறு தொகை என்றாலும் முதலீடு செய்யுங்கள். இனிமேல் என் Investment Workshopல் இந்த Moral Investment பற்றியும் வலியுறுத்தி சொல்ல இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக