சனி, 20 ஏப்ரல், 2019

நீதித்துறையை மிரட்டுகிற நிலை பாஜக ஆட்சி .. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை!.

ஆலஞ்சியார் : ”நீதித்துறை மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது .. என்ன விலை கொடுத்தும் அவர்களால் வாங்க முடியவில்லை” உச்ச நீதிமன்ற நீதிபதி
தலைமை நீதிபதி எனவே என் மீது பெண்ணை வைத்து புகார் கொடுக்க வைத்துள்ளார்கள் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதில் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது இதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எனது இருக்கையில் இருந்து சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை!..
நீதிபதிகள் மீது குற்றசாட்டுகள் வருவது புதிதல்ல என்றாலும் தனக்கு சாதகமான நடந்துக்கொள்ளாதவர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை அரசுக்கு இணக்கமாக அல்லது ஆள்வோருக்கு தலையாட்டுகிறவர்களாக நடத்த முயற்சிப்பது நாட்டின் நீதித்துறையின் நம்பிக்கையை சிதைக்கிறது நான் நேர்மையானவன் என்கிறார் நீதிபதி அவரின் வங்கிகணக்கை கூட வெளியிட்டு என்னைவிட என் உதவியாளர்கள் கூடுதலாக பணம் சொத்து வைத்திருக்கிறார்கள் என்கிறார் .. நீதித்துறை வட்டாரங்களில் "விலைக்கு " வாங்கமுடியாதவர் என்ற பெயர் இருப்பதாக சில ஊடகவியலாளர்கள் பதிவு செய்கிறார்கள் .. மிக முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு ஏற்றதும் பாஜக அரசிற்கு பெரும் நெருக்கடியை தந்ததால் இவர் மீது ஒருவித வன்மத்தோடு செயல்படுவது தெரிகிறது ..

நீதித்துறையை மிரட்டுகிற நிலை பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதிகரித்திருக்கிறது அதிலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெருவிற்கு வந்து மிக மோசமான சூழல் நிகழ்வதாக சொன்னது மோடியின் ஆட்சியில் தான் அரசியல் சாசனத்தை மதிக்காமல் மநுநீதியை சொல்லி யாகூப்மேனன் தூக்கின் இறுதிவிசாரணையின் போது வெளிப்படையாகவே மத்திய அரசு வழக்கறிஞர் நடந்துக்கொண்டார் .. சிராபுதீன் வழக்கில் நீதிபதி தற்கொலைக்கு தூண்டியதெல்லாம் கடந்து கடைசியில் உச்சமீதிமன்ற நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்து இந்த ஆட்சியில் கோரப்பற்களை .. அது நீதித்துறையை கடித்து குதறுவதை சொல்கிற நிலை வேறெந்த நாட்டிலும் நடைபெற்றதில்லை ..
..
உச்சநீதிமன்றமே பாசிசத்தின் பிடியில் உச்சநீதிமன்ற நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தன் செயல்பாட்டை துவங்கி வெகுகாலமாகிவிட்டது அங்கே பார்பன நீதிதான் சமீபகாலமாக கிடைக்கிறது சமூகநீதியோ இந்திய அரசியல் சாசன சட்டம் குடிமக்களுக்கு வழங்கியிருக்கிற நீதியோ பெற முடியவில்லை .. வேணும் என்கிற போது உடனே தீர்ப்பை பெறலாம் தேவைபட்டால் எத்தனா காலம் வேண்டுமானாலும் தீர்ப்பை நிறுத்திவைக்கலாம் என்பதை ஜெயலலிதா வழக்கில் நாம் பார்த்ததுதான் .. நீதித்துறை சாமானியனின் கடைசி நம்பிக்கை அதில் கூட அரசோ ஆள்பவரோ குறிக்கீடு செய்தால் ஜனநாயகத்தின் நம்பிக்கையற்று போய்விடும் போகிற போக்கை பார்த்தால் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து வருமென்றே தோன்றுகிறது
"அறம் கெடுமென்ற நிலை வந்தால் குடி கெடும்" ..
..
இந்த பாசிச பாஜக அரசு எல்லா துறைகளிலும் தங்கள் சித்தாந்தத்தை நுழைக்க பார்க்கிறது குஜராத் பாட புத்தகத்தில் ஏசுவை பிசாசு என்று சித்தரிக்கிறது ..உயர்கல்வியில் பார்பனர்கள் மட்டுமே அதிகளவில் இடம்பெற வழிவகுக்கிறது மாணவர்கள் மத்தியில் சாதி பாகுபாட்டை நிறுவுகிறது மதம் சாதி எனும் தீமூட்டி வன்முறை கலவரம் என தூண்டி ஒருவித பதட்டத்தோடு நாட்டை வைத்திருக்கிறது ..
கல்விநிலையங்கள் நீதிமன்றங்கள் என எல்லா அறத்துறையையும் அரிக்க தொடங்கியிருக்கிறது பாசிசம் ..
எச்சரிக்கை இந்த பாசிச பாஜகவை தோற்கடித்த தீரவேண்டும் இல்லையெனில் இந்த நாட்டில் மநுநீதி மட்டுமே செயல்படுத்த கூடிய ‍நிலை வரும் பார்பனன் மட்டுமே வாழ தகுதியானவன் என்ற பண்டைய நிலைக்கு நாம் தள்ளபடுவோம்
சமநீதியோ சமூகநீதியோ நமக்கு கிடைக்காது
நீதித்துறை சுயமாக செயல்பட ஆட்சிமாற்றம் ஒன்றே தீர்வு .. வடமாநிலங்களில் நல்லதொரு தீர்ப்பை மக்கள் எழுதிக்கொண்டிருப்பதாகதான் செய்திகள் வருகிறது ..தென்னகத்திலும் பாசிசத்தை வீழ்த்த தயாராகிவிட்டார்கள் ..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: