சனி, 20 ஏப்ரல், 2019

தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பு சசிகலாவுக்கு தெரியாதாம் .. கொதிக்கும் சசி குடும்பம்

தினகரன்`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது!' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்`vikatan: சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது!’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்">சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது!’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள் பொதுச் சின்னம் வேண்டும் என்றால் தேர்தலுக்கு முன்னரே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். இப்போது 4 தொகுதி தேர்தலின்போது மட்டும் அக்கறை காட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது. `இது சசிகலா சார்ந்த கட்சி அல்ல’ என்பதைக் காட்டுவதுதான் தினகரனின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
ம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `சிறையில் இருக்கும் சசிகலாவிடம் முறைப்படி அனுமதி வாங்கினாரா என்பதும் சந்தேகம்தான். தினகரனின் அறிவிப்பால் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்’ என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.
நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். மீண்டும் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இதன் தொடர்ச்சியாகப் பரிசுப்பெட்டி சின்னத்தைப் பெற்றார். இதுதொடர்பான வழக்கின்போது, `அ.ம.மு.க-வை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யாததால் பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது’ என நீதிமன்றத்தில் தெரிவித்தது தேர்தல் ஆணையம். அப்போது, `தேர்தல் தேதி அறிவிப்பால் தனிக்கட்சியாகப் பதிவு செய்ய முடியவில்லை’ என நீதிமன்றத்தில் தெரிவித்தது தினகரன் தரப்பு. `நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியின்படி தனிக்கட்சியாகப் பதிவு செய்கிறார் தினகரன்’ என அ.ம.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். `அ.தி.மு.க மீது உரிமை கோரி தொடர்ந்த வழக்கை சசிகலா நடத்துவார்’ என்றும் `அ.ம.மு.க-வை தினகரன் வழிநடத்துவார்’ என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பின் மூலம், இனி அ.தி.மு.க-வுக்கு தினகரன் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. `அவருக்கு ஆதரவாக இருக்கும் கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்களும் அ.ம.மு.க-வில் பதவி வகித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி அவர்களது பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படும்’ எனப் பேசத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க. வட்டாரத்தில்.

தினகரனின் `திடீர்’ முடிவு குறித்து மன்னார்குடி குடும்ப உறவுகளிடம் பேசினோம். “சசிகலாவை தினகரன் சந்தித்து 1 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. இப்படியொரு ஏற்பாடு நடப்பது குறித்து குடும்ப உறுப்பினர்கள் யாருக்குமே தகவல் சொல்லவில்லை. இதனால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். பன்னீர்செல்வம், எடப்பாடிக்கு அடுத்ததாக தினகரன் செய்த துரோகமாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எங்களுக்கு தெரிந்தவரையில் அ.ம.மு.க-வைத் தனிக்கட்சியாகப் பதிவு செய்வது குறித்து சசிகலாவிடம் எந்த அனுமதியையும் அவர் வாங்கவில்லை” என விவரித்தவர்கள்,

“4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பொதுவான சின்னம் வேண்டும். அதற்காகக் கட்சியாகப் பதிவு செய்கிறோம் என தினகரன் தரப்பினர் சொல்கிறார்கள். ஆனால், நோக்கம் அதுவாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அ.ம.மு.க-வைத் தொடங்கியபோது, `எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியைத்தான் ஜெயலலிதா வழிநடத்தினார். ஆனால், நாங்களே சொந்தமாகக் கட்சியைத் தொடங்கி நடத்துகிறோம்’ எனப் பேசி வந்தனர் தினகரன் தரப்பினர். சொல்லப் போனால், அவர் அ.ம.மு.க-வைத் தொடங்குவதில் அப்போது யாருக்கும் உடன்பாடு இல்லை. `போராடியாவது அ.தி.மு.க-வைக் கைப்பற்றிவிட வேண்டும்’ என்ற மனநிலையில்தான் தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் இருந்தனர். அதனால்தான் அ.ம.மு.க தொடக்கவிழாவுக்கே அவர் தாமதமாக வந்தார். தன்னுடைய எதிர்ப்பையும் அவர் பதிவு செய்தார். அ.ம.மு.க-வைத் தொடங்குவதில் சசிகலாவுக்கும் விருப்பம் இல்லை. இதற்கு பதில் அளித்த தினகரன், `நம்மால் ஒரு லெட்டர் பேடு கூட அடிக்க முடியவில்லை. பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்கும்போது எந்த அமைப்பின் பெயரைச் சொல்வது?’ என விளக்கம் கொடுத்தார். இதுகுறித்து மதுரையில் பேசும்போதும், `இது ஒரு தற்காலிக ஏற்பாடு. எங்கள் இலக்கு அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதுதான்’ என்றார் தினகரன்.

அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும்போதே, `பொதுச் செயலாளர் உத்தரவின்படி’ என்ற பெயரில் தினமும் அறிக்கை வெளியிடுவார். இதைப் பார்த்து சி.வி.சண்முகம் எழுப்பிய முதல் கேள்வியே, `தினமும் ஒருத்தரை நீக்குகிறீர்கள், ஒருவரைச் சேர்க்கிறீர்கள். இதெல்லாம் சின்னம்மாவுக்குத் தெரியுமா?’ என்றார். இதுதான் பிரச்னைக்கான தொடக்கப் புள்ளியாக இருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முதல்நாள் நள்ளிரவில், `நீங்கள் போய்விட்டு வரும் வரையில் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என ஒப்புதல் கையொப்பம் வாங்கிவிட்டார் டி.டி.வி. அதை வைத்துக்கொண்டுதான் தனக்கு வேண்டியவர்களைச் சேர்ப்பது, பிடிக்காதவர்களை நீக்குவது எனச் செயல்பட்டு வந்தார்.

தற்போது வரையில், `பொதுச் செயலாளர் உத்தரவின்படி’ என்ற பெயரில்தான் அறிக்கை வந்து கொண்டிருந்தது. `சசிகலாவை அ.ம.மு.க-வில் இருந்து நீக்கிவிட்டோம்’ எனத் தினகரன் அறிவிக்கவில்லை. `சிறையிலிருந்து அவர் வந்ததும் தலைவராக ஏற்றுக் கொள்வோம்’ என்றொரு விளக்கமும் கொடுக்கிறார்கள். பொதுச் சின்னம் வேண்டும் என்றால் தேர்தலுக்கு முன்னரே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். இப்போது 4 தொகுதி தேர்தலின்போது மட்டும் அக்கறை காட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது. `இது சசிகலா சார்ந்த கட்சி அல்ல’ என்பதைக் காட்டுவதுதான் தினகரனின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. `கட்சி என்றால் நான் மட்டும்தான்’ என நிரூபிக்கப் பார்க்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பெரிய அளவில் நிதி உதவி செய்தார் சசிகலா. பண ஏற்பாடுகளுக்கு மட்டுமே தினகரனுக்கு சசிகலா தேவைப்படுகிறார்” என்கின்றனர் ஆதங்கத்துடன்.

ஆனால், தினகரனின் `புதிய பதவி’ குறித்து நம்மிடம் பேசும் அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலர், “அ.தி.மு.க-வுக்கு மாற்றான தற்காலிக ஏற்பாடாகத்தான் அ.ம.மு.க-வை நடத்தி வந்தோம். தொடர்ச்சியாக இயங்குவதற்கு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. எங்களுக்கென்று பொதுச் சின்னம் இருந்தால்தான் மக்கள் மத்தியில் தனி அடையாளத்தோடு தென்பட முடியும். இதுதொடர்பாக, சசிகலாவிடம் நேற்றே கையொப்பம் வாங்கிவிட்டோம். அவருடைய அனுமதியோடுதான் தினகரன் செயல்படுகிறார். `அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாதான்’ என்பதை நீதிமன்றத்தில் சட்டரீதியாக போராடி வெல்வோம். அதன்பிறகு அ.ம.மு.க-வை அ.தி.மு.க-வுடன் இணைத்துவிடுவோம். இதுதான் திட்டம்” என்கின்றனர்.
vikatan.com

கருத்துகள் இல்லை: