திங்கள், 15 ஏப்ரல், 2019

ரபேல் பிரதமரை திருடன் என்பதா? - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என்பதா? - ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
மாலைமலர் : ரபேல் போர் விமான ஊழல் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று குற்றம் சாட்டும் ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்ததுடன், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
புது டெல்லி: பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ரூ.56 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதன் மூலம் முறை கேடுகள் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

ரபேல் ஒப்பந்த விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்,  எந்த முறைகேடும் நடந்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டது.
அந்த ஆவணங்கள் அடிப்படையில் ரபேல் ஒப்பந்தம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் பாஜக முன்னாள் மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் புதிய ஆவணங்கள் அடிப்படையில் மறு ஆய்வு விசாரணை நடத்தலாம் என்று கடந்த வாரம் அறிவித்தது

கருத்துகள் இல்லை: