திங்கள், 15 ஏப்ரல், 2019

டேராடூனில் பாஜகவினரின் குறை கேட்பு கூட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்

Sudhakar Chandra : இந்தச் செய்தியை எந்தத் தமிழகப் பத்திரிகையிலும் வந்ததாக நான் பார்க்கவில்லை .
இன்று - பத்திரிகையாளர் கவின்மலர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனேன்.
உத்தரகாண்ட் தலைநகர் டேராடூன்.
பாரதிய ஜனதா தலைமை அலுவலகம்.
மாநில அமைச்சர் சுபோத் உனியால்
'ஜனதா தர்பார்' நடத்தி மக்கள் குறைகளைக் கேட்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த நடுத்தர வயது ஆள் முகம் வெளிறி தட்டுத் தடுமாறி வந்தார்.
44 வயசு.
பிரகாஷ் பாண்டே .. ( தந்தி டிவி பாண்டே உறவினர் )..
அவர் உரத்த குரலில் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கத்தினார்.
"என்னால் தொழில் நடத்த இயலவில்லை.
மோடி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் - ஜிஎஸ்டி வரிக்கொடுமையும்
என் தொழிலை முடக்கிவிட்டன. பெருநட்டமாகிவிட்டது. என் கடன்சுமை அதிகரித்துவிட்டது. பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு - என் வாங்கிக்கடன்களிலிருந்து விலக்கு அளிக்கக் கோரினேன். எதுவுமே நடக்கவில்லை. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன்....அதனால்...."

மந்திரியும் மற்றவர்களும் புரியாமல் ஒருவரையொருவர் பார்க்க -
பிரகாஷ் பாண்டே தொடர்ந்து சொன்னார் :
"அதனால்....நான் விஷம் குடித்துவிட்டேன். என்போன்ற லட்சக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வு சீரழியக் காரணமான பாரதிய ஜனதா அலுவலகத்திலேயே என் உயிர் மடியட்டும்...."
அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள். குடித்துவிட்டு டிராமா பண்ணுகிறான் என்றார்கள். காங்கிரஸ்காரர்கள் கலாட்டா பண்ண அனுப்பிவைத்திருக்கிறார்கள் என்றார்கள்.
பாண்டே - அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் - தொலைக்காட்சி செய்தியாளர்கள் - கேமராக்கள் பக்கம் திரும்பிச் சொன்னார் :
"இந்த பாரதிய ஜனதாவைவிட காங்கிரஸ் ஆட்சி எவ்வளவோமேல். இந்தப்பாவிகளால் என்போன்றோர் வாழ்க்கை நாசமாகிவிட்டது ...."
பாஜகக்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ? அவரை இழுத்துவந்து ஆபிஸ் வாசலில் தள்ளினார்கள்.
போலீஸ் பயந்துபோய் அவரை பக்கத்திலிருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனபோதுதான் அவர் சொன்னது உண்மை என்று தெரியவந்தது.
ஐயோ, இந்தாள் செத்துவிட்டால் பெரியப் பிரச்சனை ஆகிவிடுமே என்று பரபரத்தார்கள். முதலுதவி செய்து அடுத்த ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனார்கள்.
ஆனால்....
பிரகாஷ் பாண்டே இறந்துபோனார் நண்பர்களே!
--------------------------------------------------------------------------------------
ஆதாரம் /
timesofindia.indiatimes.com
thelogicalindian.com/

கருத்துகள் இல்லை: