சனி, 20 ஏப்ரல், 2019

திரு.ஆலடி அருணா கல்வி உதவி திட்டம்.. ஆலடி எழில்வாணன்

ஆலடி எழில்வாணன் : எனது அன்பு தந்தையும், நெல்லை, ஆலடிபட்டி
மண்ணின் மைந்தருமான, முன்னாள் சட்ட அமைச்சர் திரு.ஆலடி அருணா அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு மூத்த அரசியல்வாதி! அறிஞர் அண்ணாவால் "சிந்தனைக் கனி" என்று அழைக்கப்பட்டவர்! ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்! தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்.
கல்விக்கு எப்போதுமே முக்கியத்துவம் வழங்குபவர். சட்ட அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் சட்ட பல்கலைக்கழகம் கொண்டு வந்தார். மேலும், திருநெல்வேலியில் சட்டக் கல்லூரி கொண்டு வந்தார், கலைக் கல்லூரிகள் பல உருவாக காரணமாக இருந்தவர். மேலும், பல அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்தி, கட்டிடங்கள் உதவி, நிதி உதவி என பல உதவிகளை செய்துள்ளார்.
நெல்லை மாவட்ட மக்கள் சிறப்பான உயர்கல்வியை பெற ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நிறுவினார்.
அன்னாரின் பெயரில் "ஆலடி அருணா கல்வி உதவி திட்டம்" 2010 முதல் செயற்பாட்டில் உள்ளது. இது +2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க உதவும் திட்டம்.
பொறியியல் படிப்பிற்கான கல்வி உதவி திட்டம்:
+2 தேர்வில் கட் ஆஃப் 180+ எடுக்கும் மாணவர்களுக்கு பொறியியல் பட்டம் படிக்க நான்கு ஆண்டுகள் கல்வி கட்டணம் + விடுதி கட்டணம் கிடையாது.

கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கான கல்வி உதவி திட்டம்:
+2 தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் கல்வி கட்டணம் + விடுதி கட்டணம் கிடையாது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு, அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் நிர்வாகமே மாணவர்களை நேரடியாக தேர்வு செய்கிறது! எனவே தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த நல்ல திட்டத்தை உரியவர்களிடம் சென்றடைய இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள்; உங்களால் சில மாணவர்கள் பயனடையலாம். நன்றி.
அன்புடன்
ஆலடி எழில்வாணன்
9443424479
முடிந்தவரை பகிரவும்

கருத்துகள் இல்லை: