
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இதற்கிடையே, மதியம் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக