திங்கள், 9 ஏப்ரல், 2018

ISISI வங்கியின் சாந்தா கோச்ச்சரின் கணவர் கம்பனிக்கு முறைகேடு ...மற்றும் 3250 கோடி விடியோகான் கடன் ...

சாந்தா கோச்சர் பதவி விலகுவாரா?மின்னம்பலம்: வங்கிக் கடன் மற்றும்
பங்குப் பரிமாற்ற மோசடியில் சிக்கியுள்ள தீபக் கோச்சருக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீது புலனாய்வு
அமைப்புகளின் பார்வை திரும்பியுள்ளது. மறுபுறம் சாந்தா கோச்சர் பதவி விலக வேண்டும் என்று வங்கி இயக்குநர்கள் குழு தரப்பில்
மின்னம்பலம்: வலியுறுத்தப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ.3,250 கோடி கடன் பெற்றது மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயலதிகாரி சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சருக்குச் சொந்தமான நிறுவனத்தின் உரிமம் மாற்றப்பட்டது ஆகிய வழக்குகளில் அவர்கள் இருவரும் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் தீபக் கோச்சருக்குச் சொந்தமான அனைத்து நிறுவனங்களின் செயல்பாடுகளையும் புலனாய்வு அமைப்புகள் ஆய்வு செய்யவுள்ளன. இந்நிறுவனங்கள் ஷெல் நிறுவனங்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிறுவனங்களின் பெயரில் நிதிப் பரிமாற்றமும், வரி ஏய்ப்பும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

மறுபுறம் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயலதிகாரி சாந்தா கோச்சரின் பதவி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீபக் கோச்சரின் பங்கு மாற்றச்
சர்ச்சை எழுந்தபோது மூன்று வாரங்களுக்கு முன்னர் ஐசிஐசிஐ வங்கி
இயக்குநர்கள் குழு தனது முழு ஆதரவையும் சாந்தா கோச்சருக்கு வழங்கியிருந்தது. ஆனால் தற்போது அக்குழுவின் பாதிப்பேர் சாந்தா கோச்சருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். சாந்தா கோச்சரின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில் அவரது கணவர் பங்கு பரிமாற்றச் சர்ச்சையில் சிக்கியுள்ளதாலும், வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதில் சந்தேகம் இருப்பதாலும் சாந்தா கோச்சர் பதவி விலக வேண்டும் என வங்கி இயக்குநர்கள் சிலர் கருதுகின்றனர். ஏற்கெனவே ஐசிஐசிஐ வங்கியின் சந்தைப் பங்குகள் தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் சாந்தா கோச்சர் பதவி விலகினால் பெரும் சரிவு ஏற்படும் எனச் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: