ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

செங்கல்பட்டு தண்ணீர் உறிஞ்சி எடுக்கும் ரெயில்வே ..தினசரி 75,000 ஒரு லிட்டர் ... தண்ணீர் தராதவர்களுக்கே தண்ணீர் வழங்கும்


Special Correspondent FB Wing : காவிரி வாரியம் அமைக்காத எதிரொலி புது
பிரச்சனையில் சிக்கும் மத்திய அரசு< ரயில்வேயின் துணை நிறுவனமான உணவு மற்றும் சுற்றுலா அமைப்பு செங்கல்பட்டு அருகே பாலூரில் ரயில் நீர் தொழிற்சாலையை இயக்கி வருகிறது. பாலூரில் நாள் ஒன்றுக்கு 1.8 லட்சம் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. பாலூரை தொடர்ந்து பீகார் மாநிலம் தானாபாத், டெல்லி ஆகிய இடங்களில் ஐஆர்சிடிசியின் ரயில்நீர் தொழிற்சாலை அமைக்கப்பட்டன ஆனால், நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் ரயில்வேக்கு 30 லட்சம் ஒரு லிட்டர் பாட்டில் தேவைப்படுகிறது. ரயில்வேயில் நூறு சதவீத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தனியார் பங்களிப்புடன புதிதாக 6 ரயில்நீர் தொழிற்சாலை தொடங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.   ; தமிழகத்தில் உள்ள தொழிற்சாலையில் மட்டும், நாள் ஒன்றுக்கு தலா 75,000 ஒரு லிட்டர் பாட்டில் தயாரிக்கப்படுகிறது.
இது இந்தியாவில் மூன்றாவது தொழிற்ச்சாலையாகும். தென்னிந்தியாவில் இந்த ஒரு தொழிற்சாலை மட்டும்தான் இருக்கிறது.

 இந்த தொழிற்சாலை நிலத்தடி நீரை எடுத்து அதனை சுத்திகரித்து விற்பைனை செய்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் யாரெல்லாம் தமிழ் நாட்டுக்கு தண்ணிர் தர மாட்டோம்னு சொல்றாங்களோ, அவங்களுக்கெல்லாம் இங்க இருந்துதான் தண்ணீர் சப்பளை ஆகிறது.<"> தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடந்து வருவதால், நீர்நிலையை காக்க வேண்டி அப்பகுதி மக்களின் பார்வை இந்த தொழிற்சாலை மீது திரும்பியுள்ளது."> இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.&

கருத்துகள் இல்லை: