வெள்ளி, 13 ஏப்ரல், 2018

17 மாணவர்களுக்கு சிறை,, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடிய திருச்சி ..

gh
நக்கீரன் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க
கோரி தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் எதிர்கட்சிகள் முதல் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் எல்லோரும் போராட்டம், முற்றுகை பொதுகூட்டம் என நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜல்லிகட்டு போரட்டத்திற்கு வரலாறு காணாத வகையில் கூடிய திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திடீரென அப்பகுதியில் கூடியதுடன், சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் தொடங்கினர். நிமிடத்துக்கு நிமிடம் மாணவர்கள், அந்த வழியே செல்லும் பொதுமக்கள் எல்லாம் அப்படியே போராட்டத்தில் கலந்து கொண்டதால் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அப்பகுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மாணவர்களை தடியடி நடத்த முடிவு செய்தனர்.


இந்த இடம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடம் என்பதால் போலிசார் மிகவும் கூடுதல் பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடக்கும் இடத்தை கண்டோன்மென்ட் ஏசி சச்சிதானந்தம் தலைமையில், இன்ஸ் விஜயபாஸ்கர், நிக்சன் ஆகியோர் தலைமையில் போலீஸார் படை சுற்றி வளைத்ததுடன் மாணவர்கள் மீது கடுமையான தடியடி நடத்தப்பட்டது. பல மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு இடையில் திருச்சி பட்டாபிராமன் தெருவில் அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை அருகே கர்நாடக பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் திருச்சி நீதிமன்ற வளாகம் கலவர இடமாக மாறியது.

மாணவர்களை விரட்டி அடித்ததில் பல பேர் செல்போன்கள் பறந்து விழுந்தது, போலிசின் அடிக்கு பயந்து ஓடியவர்கள் பைக்குளை எல்லாம் விட்டுவிட்டு சென்றனர். அந்த பைக்குகளை எல்லாம் ஏற்றி சென்ற பைக்குகள் மொத்தம் 15 இருக்கும்..

கைது செய்யப்பட்ட மாணவர்கள் மொத்தம் 70 பேர்.. இதில் 7 பேர் ஒரு குழுவாகவும், 15 பேர் இன்னோரு குழுவாகவும் பிரித்து உறையூர் மற்றும் தில்லைநகர் காவல்நிலையத்தில் மீது அரசு பேருந்துகளை சேதப்படுத்தியாக வழக்கு பதிவு செய்த திருச்சி போலிஸ்.. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டர் நீதிபதி திருநாவுக்கரசர். இதில் நிஷா, யோகேஷ்வரி, என்ற இரண்டு பெண்களை வழக்கு பதிவு செய்யாமல் கடைநேரத்தில் விடுதலை செய்தனர்.

மீதம் இருந்த 20 பேர் 5 பேரை ஒரு குழுவாக ரிமாண்ட செய்தனர். மீதம் 55 பேரில் பேர் வயது மைனர் என்று நீதிமன்றத்தில் சொன்னதால் அவர்களை மட்டும் ரிமாண்ட செய்யாமல் வைத்திருக்க சொல்லியும். மற்ற அனைவரையும் தினேஷ்குமார். இப்ராஹீம், வினோத், ஆண்டனி சகாயராஜ், முருகேஷன், அசாருதீன், முகமது ஈவித்கான், காதர்உஷேன், நியாஷ், அப்பாஸ் மந்திரி, பரமேஸ்வரன், பீர்முகது, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

நீதிபதி திருநாவுகரசிடம் மாணவர்கள் நாங்கள் தான் முதலில் கோஷங்கள் போட்டு கைதாகி கொண்டு சென்றனர். எங்களை கொண்டு செல்லும் போது தான் சில பேர் பேருந்தை உடைத்து விட்டார்கள் என்று போலிஸ் எங்களிடம் சொன்னது. ஆனால் கடைசியில் எங்கள் மீது பேருந்தை உடைத்தாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. எங்களை மண்டபங்களில் தங்க வைத்து கடுமையாக தாக்கினார்கள். குறிப்பாக கண்டோன்மெண்ட் ஏசி சச்சிதானந்தம் மிருகதனமாக மாணவர்களை தாக்கினார். அப்போது படம் எடுத்த கேமிரா மேன்களின் கேமிராவை பறித்தார். நீங்கள் எல்லாம் படம் எடுத்து எதை சாதிக்க போறீங்க என்று மிரட்டியிருக்கிறார்.

நீதிமன்றத்தில் மாணவர்களை ரிமாண்ட செய்ய போகிறார்கள் என்பதை கேள்விப்பட்ட பெற்றோர் கதறினார்கள். நம்மிடம் பேசி ஒரு பெற்றோர் எங்க பையன் அடிதடி கேஸ்ல கொலை கேஸ்ல உள்ள போகல, காவிரிக்கா தானே சிறை செல்கிறான் பரவாயில்லை. ஆனா அவனுக்கு நாளை காலேஸ் தேர்வு இருக்கு அதை மட்டும் எழுதிட்டா பரவாயில்லை, அவனோட லைசன்ஸ் எல்லாத்தையும் போலிஸ் எடுத்துகிட்டாங்க, அவனோட வண்டியும் எங்க இருக்குன்னு தெரியல என்று புலம்பினார்கள்.

இதே போல மீதம் இருந்த 30 பேரையும் 1 நாள் முழுவதும் மண்டபத்தில் அடைத்து நீ போராட்டக்கூடாது என்கிற பயத்தை ஏற்படுத்தி இன்று மாலை தான் 31 பேரை விடுதலை செய்திருக்கிறார்கள்.

காவிரி ஆணையம் அமைக்க சொல்லி தமிழகம் முழுவதும் ஏன் உலக முழுவதும் தமிழர்கள் ஒருமித்த குரலில் மோடிக்கு எதிர்ப்பு என்று எதிர்ப்பு காண்பித்த நிலையில் மாணவர்கள் மீது பேருந்து உடைப்பு உள்ளிட்ட வழக்குகளில் சிறையில் அடைத்திருப்பதை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் நேரடியாக களத்தில் இறங்கிறது. அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சியினர் ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: