tamilthehindu :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி களத்தில் போராடும் போராளிகள் ஏன் போற்றப்பட வேண்டியவர்கள் என்று சத்யராஜ் வீடியோ வடிவில் விளக்கியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் மைதானத்தை முற்றுகையிட்டை ஆட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தைப் பலரும் ஆதரித்தாலும் சிலர் விமர்சித்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காவிரி போராளிகளை ஏன் போற்ற வேண்டும் என்பது குறித்த் நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர், ''எல்லோருக்கும் ஒரு குடும்பம் இருக்கு, அந்தக் குடும்பத்த காப்பாத்துவதற்காக வருமானத்தை நோக்கிய பயணம் இருக்குது. நமக்காகப் போராடுற போராளிகளுக்கும் அப்படிப்பட்ட குடும்பமும் இருக்கிறது, வருமானத்தை நோக்கிய பயணமும் இருக்குது.
ஆனா ஒரு பொதுநலத்துக்காக சுயநலம் கருதாமல், குடும்பத்தை மறந்து வருமானத்தைத் துறந்து நமக்காக போராடுற போராளிகள் எவ்வளவு உயர்ந்தவர்கள் அப்படின்னு நாம் நிச்சயமாக நினைச்சுப் பார்க்கணும்.
ஏன்னா அப்படி களத்தில் இறங்கிப் போராடும்போது, கைது செய்யப்படலாம், வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்பதைத் தெரிந்தும்.. ஒரு பொதுநலத்துகாக அவர்கள் போராடுகிறார்கள்.
இன்று அவர்களுடைய போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக நடந்து கொண்டிருக்கிறது.அந்தப் போராட்டக்களத்தில் நிற்பவர்கள் நம்மைவிட மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களுடைய தியாகத்தையும் வீரத்தையும் நான் வாழ்த்துகிறேன் என்று சொல்ல வரவில்லை
ஏன்னா பொதுவா இப்ப எல்லோரும் சொல்றாங்க இல்லையா.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்படின்னுட்டு.. அதுக்கு காரணம் என்னென்னா.. வாழ்த்துவதற்கு நாம யார வாழ்த்துறோமோ அவர்களுக்கு நம்மைவிட வயது அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் அவர்களை வாழ்த்த முடியும். இல்லையென்றால் வணங்க வேண்டும்.
இந்தப் போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகள் நம்மைவிட என்னைவிட வீரத்திலும் தியாகத்திலும் உயர்ந்தவர்கள். அதனால் அவர்களை நாம்/நான் வாழ்த்த முடியாது. போற்ற முடியும், வணங்க முடியும் அவர்களை நான் போற்றுகிறேன் வணங்குகிறேன்''
எனக் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக