சனி, 14 ஏப்ரல், 2018

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் - சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் - சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதைமாலைமலர் :அம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை: அம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் படத்துக்கு முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், அம்பேத்கர் வகுத்த அரசியல் சட்டத்துக்கு குந்தகம் விளைவிக்க முயன்றால் தடுப்போம். எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த தீர்ப்பு தொடர்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கூறினா

கருத்துகள் இல்லை: