வியாழன், 12 ஏப்ரல், 2018

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்


தினகரன் :சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பிரதமர் மோடிக்கு கருப்பு சட்டை அணிந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐ.ஐ.டி. வளாகத்திலுள்ள ஹெலிபேடில் இறங்கி பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு அடையார் கேன்சர் மையம் நோக்கி சென்றது. அப்போது எந்திரவியல் துறை அருகே கருப்பு உடையணிந்த மாணவர்கள் சிலர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு நின்றனர்.
அவற்றில், மத்திய அரசின் உயர்கல்வித்துறை சார்ந்த கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. உயர்கல்வித்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பாதுகாப்பு நடவடிக்கைளையும் மீறி மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: