“அவங்ககிட்ட இருந்தா தருவாங்க சார்.
அவங்களுக்கே இல்லாதப்ப எப்படித் தர முடியும். அவங்க இடத்தில் நீங்க இருந்தா தருவீங்களா!? அவங்களே கஷ்டப்படுறாங்க, அதில் நமக்கு எப்படி!?
அதனால் அம்மா அண்ணா தம்பி நீங்க எல்லாரும் தமிழக மக்களுக்கு தண்ணீர் தர்றோம் என்பதற்கு அடையாளமா ஒரு டம்ளர் தண்ணி தாங்க”
... என படு மொக்கையான எரிச்சலூட்டும் சென்டிமென்ட் மூலம் சிலம்பரசன் வேண்டுகோள் விடுக்க...

தமிழகத்திற்கான உரிமையின் கழுத்தில் கால் வைத்து மிதித்துக்கொண்டு....
”தமிழக எஸ்டிஆர் சிம்பு தமிழ்நாட்டுக்கும் இல்லாம, கர்நாடகத்துக்கும்
இல்லாம நடுநிலையா பேசியிருக்கார்!” என அங்கே சிலர் டம்ளரில், வாட்டர்
பாட்டிலில், 20 லிட்டர் வாட்டர் கேனில் தண்ணீர் தருவதாக படங்களும்,
காணொளிகளுமாக லைக் அள்ளி வாரிக் குவிக்கிறார்கள்.
மிஞ்சியதை கர்நாடகா வழங்க நாம் ஒன்றும் காவிரியில் பிச்சை ஏந்தவில்லை. எந்த நதியிலும் முதல் உரிமை கடைமடைக்கே. சேலம், ஈரோடு நாமக்கல் தொடங்கி பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு காவிரியே குடிநீர் ஆதாரம். உணவுக்கான உத்திரவாதமும் காவிரியே!
இந்த ஒரு டம்ளர் தண்ணி செல்ஃபி வீடியோவிற்காகவா இத்தனை காத்திருத்தல்கள். நெய்வேலியிலிருந்து போகும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மொபைல் டார்ச் அடித்து நாமும் செல்ஃபி வீடியோ போட்டு அன்பைக் காட்டிவிட்டால் அவர்கள் திருப்திப் பட்டுக்கொள்வார்களா!?
மிகக் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி, காலம் காலமாக தாக்குதல்களைத் தாங்கி, கடைசிக் கட்டத்தில் நிற்கிறோம். நீதி மன்றத்தின் தீர்ப்பை அமுல் படுத்த வேண்டி மத்திய அரசிடம் மட்டுமே இப்போது போராடிக் கொண்டிருக்கிறோம். கர்நாடகாவோடு காவிரி குறித்து சமரசம் செய்ய நம்மிடம் ஏதுமில்லை.
ஆகவே சிலம்பரசன் இந்த மாதிரியான வஞ்சக காமெடி செய்யாமல் இருத்தல் நலம்!
#WeWantCMB #CauveryIsOurRight
- P Kathir Velu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக