புதன், 11 ஏப்ரல், 2018

சென்னை ஐ பி எல் இடமாற்றம் செய்கிறோம் ... ராஜீவ் சுக்லா அறிவிப்பு.. போலீசார் போதிய பாதுகாப்பு தரமறுப்பு

சென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு - ராஜீவ் சுக்லாமாலைமலர்: சென்னையில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு தர மறுப்பதால் போட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஐபிஎல் அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். புதுடெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியானது கடும் போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்டது.< தமிழ் அமைப்புகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர். இந்நிலையில், சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது இதற்கேற்ப நாளை நடக்க இருந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.


திருவனந்தபுரம் அல்லது புனே ஆகிய மைதானங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சென்னையில் நடக்க உள்ள போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக போலீசார் மறுத்து விட்டதால் போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம் என ஐபிஎல் அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

விரைவில் புதிய மைதானம் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: