சனி, 14 ஏப்ரல், 2018

தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவணா சுரேஷ் உயிரழப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி தீக்குளித்த வைகோவின் உறவினர் மரணம்மாலைமலர் :காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விருதுநகரில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் விருதுநகரில் நேற்று காலை தீக்குளித்தார் இதைப்பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சரவண சுரேஷ் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சரவண சுரேசுக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரை நேற்று பிற்பகலில் வைகோ பார்த்து ஆறுதல் கூறினார்.



இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சரவண சுரேஷ் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

கருத்துகள் இல்லை: