திங்கள், 9 ஏப்ரல், 2018

காவிரி கடந்து வந்த பாதை .... நம்பவைத்து துரோகம் செய்த இந்திரா.. துணை போன எம்ஜியார் .....


கலைஞர் முதல்வராக இருந்த 1970 களில் கர்நாடக அரசு அங்கே தடுப்பணை கட்ட முற்படுகிறது! அதை கடுமையாக எதிர்க்கும் கலைஞர் மத்திய அரசிடம் முறையிட்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரிக்கை வைக்கிறார்! அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, கர்நாடகாவும் ஒப்புக்கொண்டால் தானே நடுவர் மன்றம் அமைக்கமுடியும் என கைவிரிக்கிறார்! கர்நாடகம் எப்போது ஒப்புக்கொள்வது என கலைஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார்!
இரண்டு கோரிக்கைகளை வழக்கில் சேர்க்கிறது தமிழக அரசு!
1. கர்நாடக அரசு மேற்கொள்ளும் தடுப்பணை முயற்சி எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதை தடுத்துநிறுத்தவேண்டும்!
2. காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்படவேண்டும்!

இதில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தச்சொல்ல முடியாது என்று முதல் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது! இரண்டாவது கோரிக்கை நிலுவையில் உள்ளது!
இதைத்தொடர்ந்து பிரதமர் இந்திராகாந்தி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மூன்று மாநில முதல்வர்களை அழைத்துப் பேசுகிறார்! நீதிமன்றத்தின் மூலம் தீர்வை எட்ட முடியாது! மூன்று மாநில அரசும் பேச்சுவார்த்தை யின் மூலம் ஒரு முடிவுக்கு வரலாம். அதற்கு முதலில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும் என முதல்வர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும் கலைஞர், இதை தான் மட்டுமே முடிவு செய்ய முடியாது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சித்தலைவர்களையும் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்கிறார்!
அதைத்தொடர்ந்து இது சம்பந்தமாக தமிழ்நாட் டில் அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டுகிறார் கலைஞர். அந்த கூட்டத்தில் ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வழக்கு வாபஸ் பெற முடிவெடுக்கப்பட்டது!
கூடவே ஒரு நிபந்தனையையும் வைக்கிறார் கலைஞர்! ஒருவேளை பேச்சுவார்த்தை பயன் தராது போனால் அடுத்து வருகிற எந்த அரசும் மீண்டும் வழக்கு தொடரலாம் என அறிவிக்கிறார்!
அதன்பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்கும் எம்ஜியார் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் எந்த வழக்கும் தொடரவில்லை. மன்னார்குடியை சேர்ந்த தனி நபர் ஒருத்தர் இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். அவர் வழக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் கழித்து தமிழக அரசும் தங்களை அதில் இணைத்துக்கொள்ள எம்ஜியார் முடிவுசெய்கிறார்!
இந்த செய்தியை நியூஸ் 7 சேனல் "காவிரி வழக்கு - கருணாநிதி வாபஸ் பெற்ற கதை " என்ற தலைப்பில் பேஸ்புக்கில் லைவ் செய்தியாக வெளியிடுகிறது!
தலைப்பைப் பார்த்தவுடன் திமுக எதிர்ப்பாளர்களுக்கு ஒரே குஷி! கருணாநிதி தான் எல்லா துயரங்களுக்கும் காரணம் என கமென்ட்களை அள்ளி வீசுகிறார்கள்! செய்தி போக போக உண்மை தகவல்களை வெளிப்படுத்த ஆரம்பித்தவுடன் முதலில் கமென்ட் போட்ட அத்தனை பேரும் கப்சிப்!
இப்போது நாம் செய்யவேண்டியது என்னவென்றால், "கருணாநிதி வாபஸ் வாங்கிய கதை " என்ற அந்த கவர்ச்சிகரமான தலைப்பையே வைத்து அந்த செய்தி வீடியோவை பகிரவேண்டும்..!
பின்குறிப்பு : இன்றிரவு 10.30 மணிக்கு அந்த செய்தி மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது! வாய்ப்புள்ளவர்கள் பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை: