: Veera Kumar - Oneindia Tmil
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தவில்லை
என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜராகும் சீனியர்
வழக்கறிஞர்களில் ஒருவரான மோகன் காதர்க்கி கூறியுள்ளார்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி
16ம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 6 வாரங்களுக்குள்
காவிரி பங்கீடு தொடர்பாக ஸ்கீம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்
தெரிவித்தது.
இந்த நிலையில், காலக்கெடு முடிந்த பிறகு, ஸ்கீம் என்றால் என்ன என
உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகி விளக்கம் கேட்டது. அதேபோல, மத்திய அரசு
நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக
அரசு தொடர்ந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வாதம்
உச்சநீதிமன்றத்தில் வாதம்
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அப்போது ஸ்கீம் என
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது குறித்து வாதம் எழுந்தது.
தமிழகம் சார்பில் வாதிடுகையில், ஸ்கீம் என்பது இறுதியாக ஒரு வாரியத்தை
அமைப்பதோ அல்லது செயல்படுத்தும் வகையிலான ஒரு குழுவை அமைப்பதோகத்தான்
இருக்க முடியும் என வாதிட்டது.
வரைவு திட்டம்
வரைவு திட்டம்
ஆனால், உச்சநீதிமன்றம் வரும் மே 3ம் தேதிக்குள், காவிரி தொடர்பான தங்கள்
தீர்ப்பை செயல்படுத்த வரைவு திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என கூறியதோடு,
இவ்வளவு நாட்கள் கழித்து தீர்ப்பில் விளக்கம் கேட்ட மத்திய அரசை
கண்டிக்கவும் செய்தது.
எனவே நடுவர்மன்ற தீர்ப்பு படி, காவிரி வாரியம்
அமைப்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளதா, அல்லது, மத்திய அரசு வரைவு
திட்டம் கொடுத்து அதை அமல்படுத்த கூறுமா என்ற குழப்பம் இருந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் இல்லை
காவிரி மேலாண்மை வாரியம் இல்லை
இதுகுறித்து கர்நாடக தரப்பு சீனியர் வழக்கறிஞரான மோகன் காதர்கியிடம்
கேட்டபோது, அவர் 'ஒன்இந்தியாவிடம்' கூறியதாவது: மத்திய அரசு ஒரு வரைவு
திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதன் மூலம்,
காவிரி மேலாண்மை அமைக்க, நடுவர் மன்றம் அறிவுறுத்தியதை ஏற்கவில்லை என்பது
உறுதியாகிவிட்டது.
கர்நாடகாவின் வாதத்தைதான் உச்சநீதிமன்றம்
ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடுவர்மன்ற தீர்ப்பு காலாவதியாகிவிட்டது
நடுவர்மன்ற தீர்ப்பு காலாவதியாகிவிட்டது
இன்றைய விசாரணையின்போது, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு பற்றி மத்திய அரசு
சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் சில சந்தேகங்களை எழுப்பினார்.
அதற்கு, நடுவர்மன்ற தீர்ப்பையும் உள்ளடக்கியதுதான் தங்கள் தீர்ப்பு என
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.
எனவே காவிரி நடுவர்மன்ற
தீர்ப்புக்கு இனி அதிகாரம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
எனவே மேலாண்மை
வாரியம் அமைத்து தண்ணீர் திறப்பை உறுதி செய்ய காவிரி நடுவர்மன்றம் கூறியதை
சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை என்றே தெரிகிறது. எனவே மத்திய அரசு, மே 3ம்
தேதி எந்த மாதிரி திட்டத்தோடு வருகிறது, அதை 4 மாநிலங்களும் ஏற்கிறதா
என்பதை வைத்தே அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கப்போகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக