tamilthehindu :தீக்குளித்த மருமகனை பார்த்து அழும் வைகோ படம் சிறப்பு ஏற்பாடு
போராட்டத்தில் ஈடுபடும் போது நான் தெரிவிக்கும் கருத்துகளையும்,
ஸ்டெர்லைட் ஆலையில் 3-1 பங்கை நான் வாங்கிவிட்டதாக சீமான் ஆட்கள் போட்ட
மீம்ஸைப் பார்த்து என்னிடம் மருமகன் வருத்தப்பட்டார் என்று வைகோ பேட்டி
அளித்தார்.
அரசியல் போராட்டங்களில் தொண்டர்கள் தீக்குளித்தது இதுவரை நடந்துள்ள நிலையில் முதன்முறையாக அரசியல் தலைவரின் உறவினரே தீக்குளித்த சம்பவம் இன்று நடந்தது. வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் தீக்குளித்தார். அவரைப் பார்த்தபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கதறி அழுதார்.
பின்னர் தன்னைத் தேற்றிக்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''30-ம் தேதி மாலையில் வந்து சரவண சுரேஷ் என்னிடம் ரொம்ப வருத்தப்பட்டார். நீங்கள் இன்று வந்த தகவலை பார்க்கவில்லையா என்று கேட்டார். ஸ்டெர்லைட் ஆலையில் என் மகன் வையாபுரி பேரில் மூன்றில் 1 பங்கு வாங்கிட்டேன், இப்போது ஸ்டெர்லைட்டுக்கு டீல் போட போகிறேன் என்று சீமான் ஆட்கள் மீம்ஸ் போடுகிறார்கள்.
32 ஆண்டுகளாக போராடுகிறீர்களே மாமா, அந்த முதலாளியைக் கூடப் பார்க்க மறுத்துவிட்டீர்கள், இப்ப வந்து திடீர்னு போராடுகிறீர்கள், வேறு வேலையிருப்பதால் நீங்கள் இப்போது அங்கு போக முடியவில்லை, ஆனால் உங்களை சாதியைக் குறிப்பிட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் 3-ல் ஒருபங்கு வாங்கிட்டு இப்ப நியூட்ரினோவில் டீல் போடப் போகிறான் என்று போட்டுள்ளார்களே, எதுக்கு மாமா உங்களை இப்படி தொடர்ந்து போட்டு இப்படி கேவலப்படுத்துகிறார்கள் என்று கேட்டார்.
நான் சொன்னேன், அப்பா வாழ்க்கை பூரா பழியைச் சுமந்துவிட்டேன். எனக்கு மனசு கஷ்டமாகத்தான் இருக்கு. ரொம்ப மனசு வேதனையா இருக்கு. ஸ்டெர்லைட்ல என் மகனுக்கு பங்கு வாங்கிட்டேன்னு போட்டதில் என் குடும்பத்தினர் ரொம்ப நொறுங்கிப் போய்விட்டார்கள். மொத்தக் குடும்பமும் மனசு எரிந்து போய் இருக்கிறார்கள்.
சீமான் வெகு சாதாரணமாக என்னைப்பற்றிக்கூட மீம்ஸ் போடுகிறார்கள் என்கிறார், தயவு செய்து இளைஞர்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து தீக்குளிப்பில் ஈடுபடாதீர்கள். உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.''
இவ்வாறு வைகோ பேசினா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக