Chinniah Kasi :சென்னை,
தமிழ்நாடு
விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்
பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக மாநில அரசு தொடர்ந்து மறுத்து வந்ததால் காவிரி டெல்டா விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பெரும் இழப்பு களுக்கு ஆளாகி யுள்ளனர். தற்கொலை, அதிர்ச்சி மரணங்கள், உற்பத்தி இழப்பு எனஅடுக்கடுக்கான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவதுநிரந்தர தீர்வுகிடைக்கும் என்று நம்பி யிருந்தோம். ஆனால், மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரிமேலாண்மை வாரியத்தை அமைக்காமல், காலக்கெடு முடிந்த பிறகு அவகாசம் கோரி மனுதாக்கல் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. தனது அரசியல் சுய லாபத்திற்காக தமிழகத்தை பாலைவனமாக்கவும் தயங்காத நிலையை மத்திய அரசு மேற் கொள்கிறது.மத்திய பாஜக அரசின் தமிழகத்துக்கு விரோதமான போக்கை கண்டித்தும், உடனடி யாக காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகமே கிளர்தெழுந்து தொடர்போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர்மோடி தமிழகத்துக்கு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வது போல் உள்ளது. எனவே, பிரதமரின் வருகைக்கு தமிழக மக்கள் தங்களின் கடுமையான எதிப்பினை தெரிவிப்பது அவசி யம் என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக் காட்டுகிறது.எனவே பிரதமர் வரும் தினத்தன்று தமிழக மக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றி இந்தியபிரதமருக்கு தங்களின் எதிர்ப் பினை தெரிவிக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. மாநிலம் முழுவதும் கருமேகம் சூழ்ந்ததோ என்று கருதும் வண்ணம் கருப்பு கொடிகள் பட்டொளி வீசி பிரதமரே திரும்பிப்போ என்று கூறும் வகையில் பிரம்மாண்டமான கருப்பு கொடிகளை ஏற்றி நமது கோபத்தை வெளிப் படுத்துவோம்.அன்றைய தினம் தமிழக நலனைப் பற்றி கவலைப்படாத பிரதமர் மோடியே திரும்பிப் போ; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம்; காவிரி எங்கள் உயிர்; எங்கள் உரிமை என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை அனைவரும் அணிந்து நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம். தமிழகத்திற்கு துரோகம் செய்பவர்களை தமிழ்நாட்டு மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார் கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கருப்புகொடி ஏற்றும் நிகழ்ச்சியினை வெற்றிகரமாக்கிட வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக