மாலைமலர் :காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை
செயல்படுத்துவதற்கான வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
SC #CauveryIssue #CauveryManagementBoard காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது. தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது.
இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அத்துடன், மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின் இடைக்கல மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது. மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக