மாவீரன்
தாத்தா ரெட்டைமலையார் பிறந்த நாள் விழா கல்பாக்கத்தில்.மாபெரும் மக்கள்
கூட்டத்தின் முன் மக்கள் தலைவர் எழுச்சித் தமிழர் தோழர் திருமா
தினகரன் : சென்னை: தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திருமாவளவன்
கூறினார். ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் மற்றும் அம்பேத்கரின் 125ம்
ஆண்டு பிறந்த நாள் நிறைவு விழா பொதுக்கூட்டம் காஞ்சி தெற்கு மாவட்ட
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், செய்யூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் நீட்
தேர்வை ரத்து செய்யக்கோரி, அனைத்து மாவட்டங்களிலும் வரும் 12ம் தேதி சமூக
ஜனநாயக அமைப்புகளின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக
பங்கேற்கும். ஜிஎஸ்டி வரி விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஆகவே,
இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் தலித் மற்றும்
பழங்குடி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தென்மாவட்டங்களில் இன படுகொலை
அதிகரித்து உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை ஏன் எதிர்க்க வேண்டும்?
ரஜினி அரசியலுக்கு வருவதை நான் வரவேற்பேன். குடியரசு தலைவர் தேர்தல்
முடிந்தவுடன், உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை
எடுக்கவேண்டும்’’ இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக