வியாழன், 26 ஜூலை, 2018

சுப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் போலீஸ் ,,, CCTV பதிவாகியது .. கான்ஸ்டபில் நந்தினி

திருடிய பெண் போலீஸ் சஸ்பெண்ட்!மின்னம்பலம்:
சென்னை சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட் திருடிய பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நந்தினி என்பவர் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இவர் எழும்பூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு இன்று(ஜூலை 26) சென்றுள்ளார். அங்கு, வெகு நேரமாக அங்கும் இங்கும் நடந்தவாறும், செல்போனில் பேசியவாறும் இருந்துள்ளார். அப்போது, அங்கிருந்த ஒரு பொருளை எடுத்து தன்னுடைய பாக்கெட்டுக்குள் வைத்துள்ளார். இதனைப் பார்த்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், அதை உரிமையாளர் பிரணவ் விடம் கூறினர்.
பின்பு, இரண்டு பொருட்களை மட்டும் பில் போட எடுத்து வந்துள்ளார் நந்தினி. அப்போது, பாக்கெட்டுக்குள் இருக்கும் பொருட்களையும் எடுத்து பில் போடுங்கள் என கடை உரிமையாளர் பிரணவ் கூறியுள்ளார். அப்படி எந்தப் பொருளும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

 அப்போது, அவரைப் பெண் ஊழியர் ஒருவர் சோதனையிட்டார். இதில், அவரது பாக்கெட்டில் 5 ஸ்டார் சாக்லேட், ஜெம்ஸ் சாக்லேட், பார் ஒன் சாக்லேட், ஓடோமஸ் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வேறு வழியில்லாமல் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இனிமேல் திருடமாட்டேன் என அவர் எழுதிக் கொடுத்தார். அதன்பிறகே, சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
வீட்டுக்குச் சென்ற நந்தினி, நடந்த சம்பவத்தைத் தனது கணவரிடம் கூறியுள்ளார். அவர் தனது நண்பர்களுடன் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று உரிமையாளர் பிரணவ்வை ஆபாசமாகப் பேசியுள்ளார். அது மட்டுமில்லாமல், அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரங்களை முன்வைத்து, பிரணவ் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, நந்தினியின் கணவர் கணேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சூப்பர் மார்க்கெட்டில் திருடிய கான்ஸ்டபிள் நந்தினியை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: