
/tamil.oneindia.com-lakshmi-priya
சென்னை: கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் சொத்து வரியை குறைக்க கோரி மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தமிழகம்
முழுவதும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்துவரி, குடிநீர் வரி,
கழிவுநீர் வரி என உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில்
குடியிருப்புகள், வாடகை குடியிருப்பு கட்டடங்கள், குடியிருப்பு அல்லாத
கட்டடங்களுக்கான சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
இந்த
உத்தரவு வரும் அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. 100 சதவீதத்துக்கு வரி உயர்வு மக்களுக்கு பெரும்
சுமையை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
100 சதவீதம் டூ 50 சதவீதம்

இதையடுத்து
உயர்த்தப்பட்ட வாடகைக் குடியிருப்புக்கான சொத்து வரியை 50 சதவீதத்துக்கு
தமிழக அரசு குறைத்துவிட்டது. புதிய அரசாணைபடி வாடகை குடியிருப்புகளுக்கான
சொத்து வரி உயர்வு 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர்
குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே
விகிதத்தில் அதாவது 50 சதவீதத்துக்கு மிகாமல் வரி இருக்கும் என்றும்
குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கான சொத்து வரியானது 100 சதவீதத்துக்குள்
இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள்
பாதிக்கப்படுவதாக கூறி சொத்து வரியை குறைக்க மதுரையில் திமுக சார்பில்
இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே திமுக தலைவர் கருணாநிதிக்கு
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக எப்போதும் போராடும்
கருணாநிதிக்கு
உடல்நலம் பாதிக்கப்பட்ட போதிலும் மக்கள் பிரச்சினைக்காக திமுகவினர்
போராடியதை மக்கள் பாராட்டுகின்றனர். மக்கள் பிரச்சினைகளுக்காக திமுக
எப்போதும் போராடும் என்று கருணாநிதியின் கூற்றை தொண்டர்கள்
நிரூபித்துவிட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக