வெள்ளி, 27 ஜூலை, 2018

கலைஞர் 50 ஆண்டுகள்.. திமுக தலைவராக பொன்.விழா ...

Shyamsundar  ONEINDIA TAMIL   சென்னை: திமுக தலைவராக கலைஞர் கருணாநிதி பொறுப்பேற்று இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாட திமுக கட்சி முடிவு செய்துள்ளது. 
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக  காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 
 இந்தநிலையில் அவரை நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாட திமுக கட்சி முடிவு செய்துள்ளது. 1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கருணாநிதி திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார் கலைஞர் கருணாநிதி. அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பின் அவர் திமுக தலைவராக பொறுப்பேற்றார். 
அப்போதில் இருந்து இப்போது இப்போது வரை அவர் திமுகவின் தலைவராக இருக்கிறார். இதற்கு இடையில் கட்சியில் இருந்து வைகோ பிரிந்தது உட்பட ஒரு சில நிகழ்வுகளில் மட்டும் கட்சியில் சிறிய சிஸ்ரியா பிளவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் தாக்குப்பிடித்து கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார்.
அதேபோல் அவர் தான் போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் இதுவரை வென்று இருக்கிறார். உலகிலேயே போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் வெற்றிபெற்ற ஒரே நபர் கருணாநிதி மட்டுமே. அவர் இதுவரை 5 முறையை முதல்வராக இருந்துள்ளது. இந்த 50 ஆண்டுகள் நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக முடிவு செய்து இருக்கிறது. ஆனால் அவரது உடல்நிலையோ சரியில்லாத காரணத்தால் கொஞ்சம், கொண்டாட்டங்கள் குறைந்து போய் இருக்கிறது. இன்று இதற்காக திமுக நிர்வாகிகள் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை: