இதையடுத்து, சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் இன்று போலீஸார் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் தோண்டினார்கள், உடல் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் காப்பக்தின் பாதுகாப்பு அதிகாரி, கண்காணிப்பாளர், பணியாளர்கள் என மொத்தம் 10 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காப்பகத்தை நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர், முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
முஷாபர்நகரில் அரசு நிதி உதவியுடன் சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்தக் காப்பகத்தில் மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தணிக்கை செய்தது. அப்போது, இந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகளை அங்குப் பணியாற்றும் ஊழியர்களே பல நேரங்களில் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும், அதில் சிறுமியை அடித்துக்கொன்று புதைத்துவிட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இதையடுத்து மும்பையைச் சேர்ந்த அந்த நிறுவனம், மாநில சமூக நீதித்துறைக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்து விசாரணையைத் தொடங்கியது.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தோண்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்த காட்சி
இங்கிருக்கும் 40 சிறுமிகளிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தியதில், பாதிக்கு மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி, பெண் ஊழியர்கள் என மொத்தம் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு மீட்கப்பட்ட சிறுமிகள் வேறுவேறு காப்பகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்தக் காப்பகமும் சீல் வைக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்த விகாரத்தில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், முதல்வர் நிதிஷ் குமார் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சிறுமிகள் பலாத்கார விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்தக் காப்பகத்தை நடத்தியவர் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருங்கியவர். அவரைப் பாதுகாக்க அரசுமுயல்கிறது எனத் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக