
தா.பாண்டியனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்தவர் தா.பாண்டியன். முதுபெரும் கம்யூனிச தலைவர்களில் ஒருவர். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 85 வயதான தா.பாண்டியன் சமீப காலமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக