மாலைமலர் : தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமாக
உள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோபாலபுரத்தில் மு.க.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Karunanidhi
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி இன்று காலை வதந்தி பரவியது.<
இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் சென்றனர்.
அவர்களிடம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் சமீபத்தில் காவிரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு
திரும்பினார். நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால்
டாக்டர்கள் வந்து அதற்கு சிகிச்சை அளித்தனர்.
தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். மற்றவர்கள் பயப்படும் படியோ அல்லது அதிர்ச்சி அடையும்படியோ எதுவும் இல்லை.
ஆனால் வதந்தி பரவி உள்ளது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கலைஞர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு
உளமார்ந்த நன்றி தெரிவிக்க டெல்லிக்கு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அவர்கள் சந்திப்பு நடைபெறவில்லை.
என்றாலும் ஒரு உண்மை வெளிவந்துள்ளது. தனிநபர் ஒருவருக்காக ராணுவ விமானத்தை எப்படி கொடுத்தார்கள் என்பது மர்மமாக உள்ளது.
அந்த ராணுவ விமானத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக துணை முதல்-அமைச்சர்
பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக வேண்டும். அதுபோல அந்த விமானத்தை
அனுப்பிய நிர்மலாசீதாராமன் மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும்.
கவர்னரை சந்தித்து இந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல் பற்றி மனு
கொடுத்துள்ளேன். விரைவில் இந்த ஆட்சி அகற்றப்படும். அதோடு ஓ.பி.எஸ்.சும்,
இ.பி.எஸ்சும் சிறையில் இருக்க நேரிடும்.
தேர்தலை சந்திக்க தயார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி உள்ளார். ஆனால்
அவர்கள் திட்டமிட்டு கொள்ளை அடிப்பதற்குத் தான் தயாராக உள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக