புதுடில்லி : மத்தியில் ஆளும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு,
அதிரடி முடிவு எடுத்துள்ளது. முக்கிய தலைவர்களின் பிறந்த நாள்
கொண்டாட்டங்கள், இறந்த நாள் அனுசரிப்பு போன்றவற்றிற்கு, கட்டுப்பாடு
விதிக்கப்பட்டு உள்ளது. தேசத் தந்தை காந்தியடிகள் மற்றும் இந்தியாவின்
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின், பிறந்த நாள் மற்றும்
நினைவு நாட்கள் மட்டுமே, இனிமேல் மத்திய அரசு சார்பில் அனுசரிக்கப்படும்.
இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நேரு, இந்திரா, ராஜிவ் குடும்பத்தினர் மற்றும் பிற அரசியல் தலைவர்களின், பிறந்த, இறந்த தினங்களுக்கு, இனிமேல் முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது என, மத்திய அரசு முடிவு அம்பேத்கார் நேரு சுபாஷ் சந்திரபோஸ் எல்லாம் இனி சும்மா குஜராத்துதான் அம்மா
செய்துள்ளது.நாட்டின் முதல் பிரதமர் நேரு, அவரின் மகள், மறைந்த இந்திரா, இந்திராவின் மகன், மறைந்த ராஜிவ், அவரின் சகோதரர் சஞ்சய் ஆகியோரின், பிறந்த தினம், மறைந்த தினம் போன்ற தினங்கள், மத்திய அரசு சார்பில்
அனுசரிக்கப்படுகின்றன.நாட்டின் பல உயரிய தலைவர்கள் இருந்த போதிலும், தொடர்ந்து வந்த காங்., அரசுகளால், இந்த மூவருக்குத் தான் அதிக முக்கியத்துவம் இதுவரை அளிக்கப்பட்டு வந்தது.பிற தலைவர்கள் மற்றும் அவர்களின் பெருமைகள் ஓரங்கட்டப்பட்டன.
பொருளாதார தாராளமய கொள்கையை அறிமுகப்படுத்திய, முன்னாள் பிரதமர், காங்கிரசை சேர்ந்த, நரசிம்ம ராவுக்கு, டில்லியில் நினைவிடமோ அல்லது அவரின் நினைவைப் போற்றும் இடங்களோ, கிடையாது. இது போல, பல தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.ஆனால், டில்லி மட்டுமின்றி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், நேரு, இந்திரா, ராஜிவ் என, ஒரு குடும்பத்தை சேர்ந்த தலைவர்களுக்குத் தான், நினைவிடங்கள் உள்ளன. மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு, இந்த மூவரின் பெயர்கள் தான் சூட்டப்பட்டு உள்ளன.இதனால், நேதாஜி, பகத் சிங், சந்திரசேகர ஆசாத், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற பல தலைவர்கள், நாட்டிற்காக பல விதங்களில் தொண்டாற்றியுள்ள போதிலும், அவர்களின் நினைவைப் போற்றும் விதத்தில், எவ்வித கொண்டாட்டங்களும், நினைவிடங்களும் கிடையாது.அது போல, அரசியல் தலைவர்களில் பலரின் பெயர்கள், பெருமைகள், வேண்டுமென்றே மட்டம் தட்டப்பட்டு, காலப்போக்கில் அவர்களும் மறக்கடிக்கப்பட்டனர்.
'இந்தியா என்றால், இந்த மூன்று தலைவர்களும் தான்' என்ற நிலையை, காங்., அரசுகள் ஏற்படுத்தி விட்டன; அதற்கு, பிரதமர் மோடி அரசு, செக் வைத்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, தேசத் தந்தை காந்தியடிகள் மற்றும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சர், சர்தார் வல்லபாய் படேலின், பிறந்த தினங்கள் மற்றும் நினைவு தினங்கள் மட்டும் தான், மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்படும். பிற தலைவர்களின் முக்கிய தினங்களை, அரசு கொண்டாடாது. அந்தந்த தலைவர்களின் கட்சிகள் மற்றும் அமைப்புகள், அந்த தினங்களை அனுசரித்துக் கொள்வது என, முடிவாகி உள்ளது.
*டில்லியில், விலை அதிகம் உள்ள இடமான, யமுனை நதிக்கரையில், 250 ஏக்கர் நிலம், முக்கிய தலைவர்களின் நினைவிடங்களுக்காக, தனியே ஒதுக்கி வைத்து, மத்திய அரசின் பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது.
*நேருவின் நினைவிடமான, சாந்தி வனம், 52 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அங்கு, ஒரு இடத்தில், இந்திராவின் மகன் சஞ்சய் சமாதி உள்ளது.
*சக்தி ஸ்தல் என்ற பெயரில், இந்திராவுக்கான நினைவிடம், 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது.
*வீர் பூமி என்ற பெயரில், ராஜிவுக்கான நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த இடம், 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது.
*இது போக, பவன்கள் என்ற பெயரில், இந்த மூன்று பேருக்கும் ஏராளமான நினைவிடங்களை, மத்திய அரசு பராமரித்து வருகிறது. அவற்றிற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன.
*நேரு வசித்த இடம், தீன்மூர்த்தி பவன் என்ற பெயரில், நினைவிடமாக மத்திய அரசு பராமரித்து வருகிறது.
*இந்திரா வசித்த சப்தர்ஜங் ரோடு இல்லம், இரண்டு பங்களாக்கள் இணைத்து, நினைவிடமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
*ராஜிவ் காந்தி பவன் என்ற பெயரில், பார்லி., அருகில் பிரமாண்ட கட்டடம்
உள்ளது. இதையும், மத்திய அரசு அமைத்துள்ள அறக்கட்டளை பராமரித்து வருகிறது.
*மேலும், தலைநகர் டில்லி மட்டுமின்றி, நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும், இந்த மூவருக்கும் சிலைகள், நினைவிடங்கள், பவன்கள், சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், அணைகள், பெரிய கட்டடங்கள் என, பெரும்பாலான இடங்கள், இந்த மூவரின் பெயரில் தான் அதிகமாக உள்ளன.
*காந்தி என, இவர்களின் பெயர் முடிவடைவதால், மகாத்மா காந்தியின் சொந்தக்காரர்கள் என, பொதுமக்கள் பலரும் நினைத்துக் கொள்கின்றனர்; அதற்கான மாயையை, இந்த தலைவர்களின் வழிவந்த காங்., தலைவர்களும், அரசுகளும் முறையாக பின்பற்றி வருகின்றன.
*இவர்கள் பெயரிலான நாட்கள், நவம்பர் 14 - நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 20 - ராஜிவ் பிறந்த நாள், இதை சத்பாவன திவஸ் என, கொண்டாடப்படுகிறது. தினமலர்.com

நாடு முழுவதும் நினைவிடங்கள், கட்டடங்கள்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக