ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஜெயா சிறையில் இருந்தபோது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சி ஆரம்பம் !

ஜெயலலிதா சிறையில் இருந்த 22 நாட்களில், கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும், எதிரிகளிடம் யார், யார் தொடர்பு கொண்டு இருந்தனர் என்பது குறித்து விசாரிக்க, கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளதாக, ரகசிய தகவல் ஒன்று வெளியாக, அதை அறிந்து கட்சியினர் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில், கடந்த 27ம் தேதி அடைக்கப்பட்ட அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதாவுக்கு, நேற்று முன்தினம், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 2ஜி முறைகேடு தொடர்பான வழக்கில், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, டில்லி திகார் சிறையிலிருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட பின், சென்னை விமான நிலையத்தில், தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விட, பல மடங்கு கூடுதலான வரவேற்பை ஜெயலலிதாவுக்கு, அளிக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வினர்  சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவில், மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.  சொத்துக்குவிப்பு என்பது லாவகமான பெயர் மாற்றம் உள்ளதை உள்ளபடி பொதுப்பணத்தை கொள்ளையடித்தல் என்று ஏன் போடக்கூடாது,
சென்னை விமான நிலையத்திலிருந்து, போயஸ்கார்டன் வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர், மனித சங்கிலியாக நின்று கைத்தட்டி, உற்சாகமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற முடிவு, அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த கட்சி நிர்வாகிகள் சிலர், ரகசியமாக ஒரு தகவலை கசிய விட்டனர். அந்தத் தகவல் தெரிந்ததும், அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்களில் சிலர், கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கலக்கம்:
இது குறித்து, கட்சி வட்டாரங்களில் கூறியதாவது:ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு முன், தண்டனைக்கு பின் என, கட்சி ரீதியாகவும்,ஆட்சி ரீதியாகவும் எதிரிகளிடம் தொடர்பு கொண்டு, சதி திட்டம் தீட்டும் நடவடிக்கையில் கட்சியில் இருந்து சிலர் ஈடுபட்ட தகவல், கட்சி மேலிடத்துக்கு சென்றிருக்கிறது. அதனால், அது குறித்த விசாரணையை ரகசியமாக நடத்தும்படி, சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவல் எப்படியோ வெளியில் கசிந்துவிட்டது. அதனால், கட்சியில் பலரும் கலக்கம் அடைந்திருக்கின்றனர். தவறு செய்தவர்கள் தான், கலக்கம் அடைய வேண்டும். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: