அமைச்சரின் தம்பியை கொலை செய்யும் கூலிப்படை தலைவனுக்கு ரூ.6 லட்சத்தில்
வீட்டுமனை, அவரது அடியாளுக்கு மினி வேன் பேரம் பேசப்பட்ட தகவல்
காவல்துறையினர் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராமன் மகன்
ரவி(45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின்
சித்தப்பா மகன். கந்தன்கொல்லை அடுத்த புஜ்ஜங்கண்டிகை பகுதியில் உள்ள மூன்று
ஏக்கர் வில்லங்க நிலத்தின் பிரச்சனையில் தலையிட்ட இவரை, கடந்த 13 ஆம் தேதி
பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் கொலை செய்தனர்.&
இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து, கொலைக்கு
மூலகாரணமாக இருந்ததாக அதிமுகவை சேர்ந்த செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்றத்
தலைவர் வெங்கடேசன், நெமிலிச்சேரி திருநாவுக்கரசு ஆகிய இருவரை கைது
செய்தனர். இதைத் தொடர்ந்து கூலிப்படை தலைவனான வேப்பம்பட்டு முருகன்(35),
வெள்ளவேடு தாஸ் என்கிற புல்லட் தாஸ்(42), பெரவள்ளூர் குட்டி என்கிற
பத்மநாபன்(45), அனகாபுத்தூர் சரண் என்கிற சரண்ராஜ்(28) உள்பட 7 பேரை
காவல்துறையினர் கைது செய்தனர்.http://tamil.webdunia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக